22 Medals : முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பாராட்டு மழை

தமிழர்களால் 22 பதக்கங்கள் - 22 Medals :

நம் தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர் – வீராங்கனையரின் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம், 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை (22 Medals) வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு நமது பாராட்டுகள். நம் வீரர்-வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள்-இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்தியா வென்றுள்ள பதக்க எண்ணிக்கையே இதுவரை ஆசிய போட்டிகள் வரலாற்றில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். வரலாற்றில் 107 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்றது.  இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

22 Medals : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 8, 2023 அன்று ஆசிய விளையாட்டு 2023 இல் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார். இந்தியாவுக்கு 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த ஏழு தங்கப் பதக்கங்களில் நான்கு உலக சாதனைகளுடன் வந்துள்ளன. முன்னாள் உலக சாம்பியன் ருத்ராங்க்ஷ் பாட்டீல் அடங்கிய இந்திய அணி, ஒலிம்பிக் வீராங்கனைகள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வாருடன் இணைந்து 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் 1893.7 என்ற உலக சாதனையுடன் தங்கம் வென்றது மிகவும் பெருமைக்குரியது.

Latest Slideshows

Leave a Reply