22 years of Jemini Movie : ஜெமினி இரண்டாம் பக்கம் உருவாகிறதா? விக்ரம் ட்வீட்

நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

22 வருடங்களை கடந்த ஜெமினி (22 years of Jemini Movie)

வித்தியாசமான வேடங்களில் நடித்த நடிகர்களின் பெயர்களைக் கூறினால், நடிகர் விக்ரமின் பெயர்கள் கண்டிப்பாக இருக்கும். சேது, பிதாமகன், அந்நியன், ஐ, இப்போது தங்கலான் என ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் அதிகளவு வித்தியாசம் காட்டக்கூடியவர். மறுபுறம், விக்ரம் தூள், தில் மற்றும் சாமி போன்ற ஒரு நல்ல கமர்ஷியல்-ஆக்சன் நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

விக்ரம் ஒரு மாஸ் நடிகராக அடையாளம் காட்டிய படங்களில் ஜெமினியும் ஒன்று. இந்தப் படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படத்தில் விக்ரம் ஒரு உள்ளூர் கேங்ஸ்டராக நடித்திருப்பதும் அவரது ‘ஓ போடும்’ வசனம் இன்றுவரை விக்ரமின் டிரேட் மார்க்காகவே ஆகிவிட்டது. 22 ஆண்டுகளை கடந்துள்ள ஜெமினி திரைப்படத்தை (22 years of Jemini Movie) பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாஜி பேசிவருகின்றனர்.

தங்கலான் :

இந்நிலையில், விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் மக்களவை தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது, வரும் மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் ட்வீட் :

இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜெமினி திரைப்படத்தின் நினைவுகளை கூர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது ஜெமினி இரண்டாம் பாகம் உருவாக இருப்பது போல சிக்னல் கொடுத்து போஸ்டரை பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ‘ஓ போட’ மறக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெமினி இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளை ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடுகிறார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்கும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அவரது பிறந்தநாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் தவிர, விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் சீயான்62 படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply