2500 Cr Worth TN Information Broadcasting Services : ரூபாய் 2500 கோடி மதிப்பில் தமிழ் நாட்டில் தகவல் ஒலிபரப்பு சேவைகள்
2500 Cr Worth TN Information Broadcasting Services - தகவல் ஒலிபரப்பு சேவைகள் ரூபாய் 2500 கோடி மதிப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் :
தூர்தர்ஷன் பொதிகை ஆனது டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (2500 Cr Worth TN Information Broadcasting Services) கூறியுள்ளார். ரூ.2500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்தியாவின் எல்லைப்புற கிராமங்களுக்கும் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு சேவைகள் கிடைக்கும் வகையில் பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய அரசின் பிரசார் பாரதி ஒளிபரப்பு நிறுவனம் சார்பில் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை 19/01/2024 முதல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்சன் அலுவலகத்தில் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஆனது நடைபெற்றது. அப்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ் டிடி பொதிகை தொலைக்காட்சி சேவை புது வகையில் ஒளிபரப்பு தொடங்க உள்ளது. ரூபாய் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிடி பொதிகை ஆனது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப டிடி தமிழில் ஒளிபரப்பப்படும். டிடி நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை ஆனது அதிகரிக்கும். மேலும் பண்பலை ஒலிபரப்பு கோபுரங்கள் ஆனது 8 இடங்களில் 19/01/2024 அன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளன.
ரூ.2500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு எல்லைப்புற கிராமங்களுக்கும் அரசின் தகவல் ஒலிபரப்பு சேவைகள் (2500 Cr Worth TN Information Broadcasting Services) கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தகவல் ஒலிபரப்பு சேவைகள் ஆனது மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவும், பாரதம் வளர்ச்சி பெறவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் டிடி தமிழ் என தமிழ் கலாச்சாரத்தை நேரில் பிரதிபலிக்கும் வகையில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மத்திய அரசால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஆனது வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற செய்திகள் ஆனது வழங்கப்படுகிறது. தகவல் ஒலிபரப்பு துறையின் நோக்கம் அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதே ஆகும் என்று கூறினார்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?