3 Feet Tall Doctor's Success Journey : கவுன்சில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி டாக்டரான கணேஷ் பாரையா

3 Feet Tall Doctor's Success Journey - 3 அடி உயர கணேஷ் பாரையா டாக்டரின் வெற்றி பயணம் :

இந்திய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று டாக்டர் படிப்பை முடித்து அரசு மருத்துமனையில் டாக்டராக பணியாற்றும் (3 Feet Tall Doctor’s Success Journey) கணேஷ் பாரையா. குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் பிறக்கும் போதே  72 சதவீத லோகோமோட்டிவ் குறைபாடுடன் பிறந்தார். தற்போது 23 வயதை அடையும் கணேஷ் பாரையாவின் உயரம் 3 அடி ஆகும். கணேஷ் பாரையா குள்ளமாக இருப்பதால் பள்ளி படிக்கும் காலக்கட்டத்தில் இவரை சக மாணவர்கள் பலவிதமாக கேலி கிண்டல் செய்துள்ளனர். கணேஷ் பாரையா சக மாணவர்களின் கேலி கிண்டல் மற்றும் ஏளனங்களையும் தாங்கிக் கொண்டார். ஆனால் தனது மனதளவில் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவோடு படித்து வளர்ந்தார். தனது கனவை நனவாக்க வெற்றிகரமாக படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றார். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் இவருடைய உயரத்தை காரணமாக கூறி எம்பிபிஎஸ் படிக்கத் தகுதியற்றவர் என கூறி அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்க மறுத்து விட்டது.

தனது உரிமைக்காக அறவழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் :

3 Feet Tall Doctor’s Success Journey : கணேஷ் பாரையா இந்திய மருத்துவ கவுன்சில் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு 2 ஆண்டுகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்தும் கணேஷுக்கு சாதகமான தீர்ப்பானது வரவில்லை. இந்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணேஷ் பாரையா உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் கணேஷ் பாரையாவுக்கு எம்பிபிஎஸ் படிக்கத் அனுமதி வழங்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கியது. கணேஷ் பாரையா 2019ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பை நல்லபடியாக முடித்து தற்போது பாவ்நகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் அவர் இந்த இடத்திற்கு எளிதில் வந்துவிடவில்லை தனது உரிமைக்காக அறவழியில் போராடி வெற்றி பெற்றுள்ளார். அறவழியில் தனது உரிமைக்காக போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை கணேஷ் பாரையா நிரூபித்துள்ளார். கணேஷ் பாரையா, “முதலில் என்னை பார்க்கும் நோயாளிகள் நான் டாக்டரா என்பதில் குழப்பமடைவார்கள். நோயாளிகள் எனது சிகிச்சையை போக போக பார்த்துவிட்டு எனக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார். டாக்டர் கணேஷ் பாரையா (3 Feet Tall Doctor’s Success Journey) குஜராத் மாநிலம் காந்திநகரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply