3 Hydropower Plants Construction In TN : தமிழ்நாடு அரசு 3 இடங்களில் நீர்மின் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கியது

3 Hydropower Plants Construction In TN :

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆனது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தமிழ்நாடு அரசு ஆனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகின்றது. தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆனது கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. கிரீன்கோ எனர்ஜிஸ் என்ற நிறுவனம் ஆனது தமிழக அரசுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் ஆனது தமிழக அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புனல் மின் நிலையங்களை அமைக்கும் பணிகளை (3 Hydropower Plants Construction In TN) மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர், பாலமலை மற்றும் நவபட்டி ஆகிய 3 இடங்களில் நீர் மின் நிலையங்கள் ஆனது அமைக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் ரூ.20,114 ஆயிரம் கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த 3 இடங்களில் நீர் மின் நிலையங்கள் (3 Hydropower Plants Construction In TN) அமைக்கப்படும். கிரீன்கோ நிறுவனம் ஆனது மின் நிலைய பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்துள்ளது.

கிரீன்கோ நிறுவனம் ஆனது இந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஏழே நாள்களில் புனல் மின் நிலையங்களை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒப்பந்தம் போட்ட வேகத்திலேயே இந்த கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் ஆனது சேலம் மேட்டூரில் ரூ.5,947 கோடியில் மூடப்பட்ட நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதேபோல பாலமலை மற்றும் நவபட்டி ஆகிய கிராமங்களை ஒட்டி கிரீன்கோ நிறுவனத்தால் இந்த புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Reply