3 New Electric Train Services In Chennai : சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில் சேவைகள்

3 New Electric Train Services In Chennai :

சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கப்படுகிறது என்று சென்னை கோட்ட தெற்கு ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 2 மின்சார ரயில் சேவைகள் ஆனது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ரயில் பயணிகள் குறிப்பாக சென்னை புறநகர் ரயில் பயணிகள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் மூன்று புதிய வழித்தடங்களில் 09.09.2024 முதல் ரயில் சேவைகள் (3 New Electric Train Services In Chennai) ஆனது தொடங்கப்படுகிறது. 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் ஆனது சென்னையில் இயக்கப்பட்டு தினமும் 8 லட்சம் பயணிகள் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர்.

ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வே துறை ஆனது குறிப்பாக புதிய ரயில் சேவைகளை தொடங்குவது, ரயில் சேவைகளை நீட்டிப்பது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என பல்வேறு முயற்சிகளை சிறப்பாக செய்து வருகிறது. சென்னை கோட்ட தெற்கு ரயில்வே துறை நிர்வாகம் ஆனது சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரூட், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைககளை சிறப்பாக இயக்கி வருகிறது.

3 வழித்தடங்களில் புதிதாக ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது :

09.09.2024 முதல் சென்னை கோட்ட தெற்கு ரயில்வே துறை நிர்வாகம் ஆனது,

  • ஆவடி – சென்னை சென்ட்ரல் ரயில் சேவை ஆனது காலை 9.50 மணிக்கு இயக்குகிறது.
  • சென்ட்ரல் – திருவள்ளூர் ரயில் சேவை ஆனது காலை 10.40 மணிக்கு இயக்குகிறது.
  • திருவள்ளூர் – சென்ட்ரல் ரயில் சேவை ஆனது மாலை 3.50 மணிக்கு இயக்குகிறது.

நீட்டிக்கப்பட்டுள்ள மின்சார ரயில் சேவைகள் :

  • 09.09.2024 முதல் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆனது சூளூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 09.09.2024 முதல் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் ஆனது சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய 3 வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகளானது (3 New Electric Train Services In Chennai) குறிப்பாக சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரிய நிம்மதி அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply