33 Years Of Vikram : திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்

33 Years Of Vikram :

தமிழ் சினிமா ரசிகர்களால் “சீயான்” என்று கொண்டாடப்படும் நடிகர் விக்ரம், திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 33 ஆண்டுகள் (33 Years Of Vikram) நிறைவடைகிறது.

பரமக்குடி கண்ட கலைஞர் :

இந்த ஊரில் இருந்து தமிழ் சினிமா தொடங்கலாம் என சில பிரபலங்கள் சொந்த ஊரை குறிப்பிடுவார்கள். அந்த வகையில் பரமக்குடி தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் இங்கிருந்து தான் வந்தவர். நடிப்புக்காக உயிரைக் கூட கொடுக்கலாம் என்ற அளவுக்கு நாட்டம் கொண்டவர். அவருடைய பல கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன சினிமாவின் வளர்ச்சிக்கு இன்றும் உதவியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஊரில் இருந்து வந்தவர் தான் விக்ரம். இவரது இயற்பெயர் கென்னடி ராஜ் விக்டர் ஆகும். விக்ரமின் தந்தை வினோத் ராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர்.

இப்படியான கலைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், பரமக்குடியிலிருந்து சினிமா கனவோடு சென்னைக்கு வந்த விக்ரம், தொடக்கத்தில் பல நெருக்கடிகளையும், தடைகளையும் சந்தித்தார். உண்மையில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சரியாக அமையவில்லை. காத்திருந்தால் காலம் நமக்கானதாக மாறும் என்பதற்கு சினிமாவில் விக்ரம் மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்தார். நடிப்பின் மீது அவருக்கு எவ்வளவு நாட்டம் இருந்தது என்பதை அவரது கதாபாத்திரங்களுக்கு அவர் ஆற்றிய உழைப்பிலிருந்தே அறிந்துக் கொள்ள முடியும்.

ரஜினி, கமலுக்கு பிறகு விக்ரம் தான் :

இன்றைய திரையுலகில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக மூத்தவர் விக்ரம் தான். ஆம் அவர் 33 வயதிலேயே ரசிகர்களிடம் (33 Years Of Vikram) பிரபலமானார். மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து சில நிறுவன விளம்பரங்களில் நடித்த விக்ரம், 1990ல் வெளியான “என் காதல் கண்மணி” படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து தந்து விட்டேன் என்னை, மீரா, உல்லாசம், புதிய மன்னர்கள், ஹவுஸ் ஃபுல் என பல படங்களில் நடித்தாலும், விக்ரமுக்கு வெற்றி என்பது கிடைக்கவே இல்லை. ஆனாலும் அவர் விடா முயற்சியுடன் போராடினார். இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு சேது படம் வெளியானது. சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ரசிகர்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். அது எப்படி என்றால் சேது படத்தில் ரசிகர்கள் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வேலை செய்ய முடியும் என்பதை நிரூபித்தார். மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 15 கிலோ எடையை குறைத்தார். அர்ப்பணிப்பு மிக்க கலைஞரை திரையுலகம் கொண்டாடத் தொடங்கியது.

வித விதமான கதாபாத்திரம் :

33 Years Of Vikram : விக்ரமின் கேரியரை எடுத்துக்கொண்டு, காசி, சாமி, தில், தூள், ஜெமினி, சாமுராய், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, தெய்வ திருமகள், ராவணன், ஐ, கடாரம் கொண்டான், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அறிமுகம் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டார். குணத்தில் வித்தியாசம் காட்டுவது முதல் உடலில் மாற்றம் கொண்டு வருவது வரை இதெல்லாம் எனக்கு சகஜம் என்கிறார். விக்ரமை வெறும் நடிகனாக மட்டும் சுருக்கிவிட முடியாது. டப்பிங் கலைஞர், பாடகர் என பல துறைகளில் சிறந்து விளங்கினார். அவருடைய நட்பு வட்டாரத்தில் கேட்டால் செம ஜாலியான நபர் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தன்னைச் சுற்றி எப்போதும் பாசிட்டிவ் வைபை வைத்திருக்கும் விக்ரமின் வெற்றிக்கு எல்லையே இல்லை. இந்நிலையில் இன்றோடு அவர் சினிமா துறையில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

Latest Slideshows

Leave a Reply