Skoda Auto நிறுவனம் இந்தியாவில் 360 Degree Digital தரத்தை பின்பற்ற முடிவு

360 Degree Digital :

செக் குடியரசு நாட்டை சேர்ந்த Skoda Auto நிறுவனம் ஆனது உலகளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்திய மார்க்கெட்டில் Skoda Auto நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. Skoda Auto நிறுவனம் ஆனது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. Skoda Auto நிறுவனம் 2021ல் முற்றிலும் புதிய ஃபிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட குஷாக் SUV காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் SUV கார்களுள் ஒன்றாக ஸ்கோடா குஷாக் விளங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் Skoda Auto நிறுவனம் ஆனது இந்தியாவில் புதியதாக மற்றுமொரு காம்பெக்ட் SUV காரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் Skoda Auto நிறுவனம் ஆனது இந்தியாவில் இதன் மூலமாக புதிய அத்தியாயத்தை துவங்கவுள்ளதாக கஸ்டமர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

"Name Your Skoda” என்கிற பெயரில் ஒரு டிஜிட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது :

Skoda Auto நிறுவனம் ஆனது தங்களது Skoda கார்களை வாங்கும் கஸ்டமர்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றும் முயற்சியாக 360 Degree Digital செயல்பாடுகளை கொண்டுவர தயாராகி வருகிறது. இதன் மூலமாக, Skoda Auto நிறுவனம் ஆனது Skoda கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்கோடா இணையத்தளத்தை பயன்படுத்துவதை மேம்படுத்தப்படுவது மட்டுமின்றி, வேறு சில செயல்பாடுகளிலும் டிஜிட்டல் தரத்தை உட்புகுத்த உள்ளது.

Skoda Auto நிறுவனம் ஆனது “Name Your Skoda” என்கிற பெயரில் ஒரு டிஜிட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஸ்கோடா கார்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்தியாவில் ஸ்கோடா அடுத்ததாக அறிமுகப்படுத்தவுள்ள காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு தங்களுக்கு விருப்பமான பெயர்களை பரிந்துரைக்கலாம். இதுவரை சுமார் 1.5 லட்ச பெயர் பரிந்துரைப்புகள் கிடைத்துள்ளதாக ஸ்கோடா நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா கார்களை வாங்குபவர்களுக்காக சில சலுகைகளை கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தது :

கஸ்டமர்கள் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மேலும் சில செயல்களையும் Skoda Auto நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கஸ்டமர்கள் தங்களது டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, Skoda Auto நிறுவனம் ஆனது ஸ்கோடா கார்களை வாங்குபவர்களுக்காக சில சலுகைகளை கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தது. மார்ச் 24 ஆம் தேதி மட்டுமே இந்த சலுகைகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மார்ச் 24 ஆம் தேதி ஒரே நாளில் மட்டுமே 709 முன்பதிவுகளை Skoda Auto நிறுவனம் பெற்றது.

'அனைவருக்குமானது ஸ்கோடா' என்கிற திட்டத்தையும் Skoda Auto நிறுவனம் செயல்படுத்தியது :

Skoda Auto நிறுவனம் செயல்படுத்திய ‘அனைவருக்குமானது ஸ்கோடா’ என்கிற திட்டம் ஒரு மெம்மர்ஷிப் புரோகிராம் ஆகும். இந்த திட்டம் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது ஆர்வமாக இருப்பவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைக்கும் முயற்சி ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்திவரும் ஸ்கோடா, இதன் மூலமாக இந்த குழுவில் அங்கம் வகிப்பவர்களுக்கு ஸ்கோடா நிகழ்ச்சிகளில் விஐபி அந்தஸ்து மற்றும் கார் & சர்வீஸை பெறும்போது சிறப்பு சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. புதிய கார்கள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் குறித்த அப்டேட்களை ‘அனைவருக்குமானது ஸ்கோடா’ மிஷனில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கவும் ஸ்கோடா முடிவெடுத்துள்ளது.

'The Service CAM' :

‘The Service CAM’ என்கிற செயலியை Skoda Auto நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply