4 New 'Heron Mark 2' Drones: எல்லை பகுதிகளை கண்காணிக்க 4 புதிய 'ஹெரான் மார்க் 2' ட்ரோன்கள்

4 New 'Heron Mark 2' Drones:

   நாட்டின் வடக்கு எல்லை பகுதியான சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் 4 புதிய  ‘ஹெரான் மார்க் 2′(4 New ‘Heron Mark 2’ Drones) ட்ரோன்களை இந்திய விமானப்படை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2000 – ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டின் வடக்கு எல்லை பகுதியில் 4 புதிய ‘ஹெரான் மார்க் 2’ (4 New ‘Heron Mark 2’ Drones) ட்ரோன்களை சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேவில் தயாரிக்கப்பட்ட இவை கண்காணிப்பு மற்றும் ஏவுகணை தாக்குதல்களுடன் வானத்தில் கண்ணுக்கு தெரியாத தூரத்தில் 36 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை ஆகும். இந்த புதிய ட்ரோன் குறித்து, ட்ரோன் படைப்பிரிவு தலைமை அதிகாரி விங் கமாண்டர் பங்கஜ் ராணா,  ட்ரோன் பைலட் ஸ்குவார்டன் லீடர் அர்பித் டாண்டன் ஆகியோர் கூறியதாவது:

விமானப்படையில் சேர்க்கப்பட்டு புதிய  ‘ஹெரான் மார்க் 2’ ட்ரோன்கள். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க  ‘ஹெரான் மார்க் 2’ ட்ரோன்கள் வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் தொடர்பு மூலம் செயல்படும் இந்த ட்ரோன் நீண்ட தூரம் பறக்கும் போது எதிரிகளின் இலக்குகளை கண்டறிந்து தகவல்களை தெரிவிக்கும். இந்தத் தகவலின் மூலம், போர் விமானங்கள் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் இலக்கு மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.

இந்த ட்ரோன்கள் மூலம் நாடு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இந்த ட்ரோன்கள் நீண்ட நேரம் பறக்கும் திறன் காரணமாக பல பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம். இந்த புதிய ட்ரோன்கள் விமானப்படையின் கண்காணிப்பு, உளவு ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கிறது. இந்த ட்ரோன்கள் எந்த காலநிலையிலும், எந்த நிலப்பரப்பிலும் இயக்க முடியும். இதில் உள்ள ஏவியானிக்ஸ் கருவிகள் ‘0’ டிகிரி வெப்பநிலைக்கு கீழ் செயல்படும் திறன் கொண்டவை. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். இது வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் இதன் மூலம் வீச முடியும்.

இந்த (4 New ‘Heron Mark 2’ Drones) ட்ரோன்கள் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்திய விமானப்படை ‘பிராஜெக்ட் சீத்தா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படையில் உள்ள 70 ஹெரான் ட்ரோன்கள் செயற்கைக்கோள் தகவல் தொடர்புடன் மேம்படுத்தப்படவுள்ளன. ராணுவத் தேவைகளுக்கேற்ப பல்வேறு ஆயுதங்களும் பொருந்தப்படவுள்ளன. முப்படைகளின் 31 பிரீடேட்டர் ட்ரோன்களும் சேர்க்கப்படுகின்றன. இதில் 15 ட்ரோன்களை கடற்படை இயக்கவுள்ளது. ராணுவமும், விமானப்படையும் தலா 8 பிரீடேட்டர் ட்ரோன்களை பயன்படுத்த உள்ளன.

Latest Slideshows

Leave a Reply