4 New Municipal Corporations Started In TN : தமிழ்நாட்டில் 4 மாநகராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது

4 New Municipal Corporations Started In TN :

கடந்த 2023 ஆம் ஆண்டு புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் ஆனது  மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் K.N.நேரு அறிவித்திருந்தார். மேலும் அவர் உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆனது உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆனது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெரிய நகராட்சிகளை எல்லாம் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் (4 New Municipal Corporations Started In TN) என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானங்கள் ஆனது நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானங்கள் எல்லாம் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தீர்மானங்கள் ஆனது தமிழக முதலமைச்சரின் பரிசீலனைக்குப் பிறகு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை தமிழக முதல்வர் அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உத்தரவிடப்பட்டது. இந்த திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்க (4 New Municipal Corporations Started In TN) தமிழக முதல்வர் உத்தரவிட்டார். 

நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால், முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி, காணொலி வாயிலாக 4 புதிய மாநகராட்சிகளை திறந்து வைத்தார். இந்த 4 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பகுதிகளுடன், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை ஆனது 25 ஆக உயர்ந்துள்ளது. முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply