4027 Women With Cancer In Tamil Nadu : 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

4027 Women With Cancer In Tamil Nadu :

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பரிசோதிக்கப்பட்ட 1.21 லட்சம் பெண்களில் 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது (4027 Women With Cancer In Tamil Nadu) கண்டறியப்பட்டது. தமிழகத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.

அதன்படி, முதற்கட்டமாக ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 6.07 லட்சம் பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.33 லட்சம் நபர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் :

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ”தமிழகத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நான்கு மாவட்டங்களில் 69,000 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டதில் 1,372 பேருக்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 52,000 பெண்களுக்கு செய்யப்பட்டதில் 2,655 பேருக்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 1.21 லட்சம் பெண்களை பரிசோதித்ததில், 4,027 அறிகுறியுள்ள பெண்களுக்கு முதல்நிலை சிகிச்சை (4027 Women With Cancer In Tamil Nadu) அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் கடுமையான சேதம் மற்றும் மரணத்தைத் தடுக்கலாம். எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் புற்றுநோய் பரிசோதனைக்கு முன்வர வேண்டும்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply