5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்

இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீருக்கு பிறகு, நிலம் (Land) இன்றியமையாதது ஆகும். அந்த வகையில் நம் இந்தியா உலக அளவில் நிலப்பரப்பில் 7-வது பெரிய நாடு ஆகும். நம் முன்னோர்கள் நிலத்தை விவசாயம், கால்நடை வளர்த்தல், வனம், வீடு கட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் தற்போது சுரங்கம், சாலைகள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல், விற்பனை செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறோம். நாம் நிலம் வாங்கும் முன்பு நம் தேவையை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நிலம் என்பது மனிதனுக்கு (5 Types Of Land In India) இன்றியமையாத செல்வமாகும். இந்த பதிவில் இந்தியாவில் காணப்படும் பல்வேறு நிலங்களின் வகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

5 Types Of Land In India

  1. குடியிருப்பு நிலம் (Residential Land)
  2. வணிக நிலம் (Commercial Land)
  3. முதலீட்டு நிலம் (Investment Land)
  4. ஈர நிலம் (Wet Land)
  5. வன நிலம் (Forest Land)

1. குடியிருப்பு நிலம் (Residential Land)

மனிதர்களின் அடிப்படை தேவையான பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், மளிகை கடைகள், மருத்துவமனை வளாகங்கள், பூங்காக்கள், ஜவுளிக் கடைகள், விளையாட்டு மைதானங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ள பகுதி குடியிருப்பு நிலம் எனப்படும். மேலும் தற்சமயம் குடியிருப்பு பகுதிகளில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் (5 Types Of Land In India) அதிகரிக்க தொடங்கிவிட்டன. ஆனால் பண்டைய காலத்தில் குடியிருப்பு நிலம் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் என்ற தொலைவில், அடிப்படை வசதிகள் இல்லாமல் அமைந்திருக்கும். ஆனால் தற்போது தொழில்துறை மண்டலம்,  வணிக வளாகங்கள், ரயில் நிலையம், தகவல் தொடர்பு வசதிகள், தொழிற்சாலைகள், மின்சார இணைப்புகள் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிலம் குடியிருப்பு அல்லது நகர்ப்புற நிலம் என அழைக்கப்படுகிறது.

2. வணிக நிலம் (Commercial Land)

வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிலம் வணிக நிலமாகும். இணையதளத்தில் ‘வணிகம்’ என்ற சொல்லை உள்ளீடு செய்தால் வணிக வளாகங்கள், உணவகங்கள், மளிகை பொருட்கள் போன்ற தகவல்களை நமக்கு வழங்குகிறது. மேலும் வணிக நிலத்தில் ஒருமுறை முதலீடு செய்யும் நபர் தன்னுடைய முதலீட்டில் இருந்து மாதம் மாதம் அதிக வருமானத்தை பெறுகிறார். இதனால் குடியிருப்பு நிலங்களை விட வணிக நிலம் அதிக விலை கொண்டதாக உள்ளது. மேலும் இந்தியாவில் சுமார் 30% வணிக நிலம் வணிகத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மையாகும்.  

3. முதலீட்டு நிலம் (Investment Land)

நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க தயாராக இருப்பவர்களுக்கு முதலீட்டு நிலம் எதிர்காலத்தில் தோற்கடிக்க முடியாத சொத்தாக மாறும். மேலும் வளர்ச்சியடையாத பகுதிகளை கண்டறிந்து அதில் முதலீடு செய்தால் அடுத்த தலைமுறையில் (5 Types Of Land In India) இரட்டிப்பான இலாபத்தை பெறலாம். முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதிக லாபத்தை எது தருகிறதோ அதன் மீது முதலீடு  செய்ய வேண்டும். இதற்கு உதாரணம் தங்கம் (Gold) மற்றொன்று நிலம். இதற்கு முக்கிய காரணம் 2019 கொரோனா பெருந்தொற்றுக்கு பின் நிலத்தின் Return On Investment (ROI) வேகமாக அதிகரித்து வருவதால், முதலீடு செய்ய விரும்பினால் தகுதியான நிலத்தின் மீது முதலீடு செய்யுங்கள்.

4. ஈர நிலம் (Wet Land)

தண்ணீரால் மூடப்பட்டு நிலத்துடன் இணைந்து நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பராமரிக்க ஈர நிலம் உதவுகிறது. மேலும் கடலூர் பிச்சாவரம், சிந்து நதி, வங்காள விரிகுடா, சதுப்பு நிலம் போன்ற பகுதிகளில் பெரும்பாலும் ஈரநிலங்கள் காணப்படுகின்றன.

5. வன நிலம் (Forest Land)

பல வகையான மரம், செடி மற்றும் கொடிகளால் மூடப்பட்டு மர பொருட்கள், வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்ய வன நிலம் பயன்படுகிறது. மேலும் இயற்கையாகவே ‘வன நிலம்’ நாட்டின் (5 Types Of Land In India) முக்கியமான செல்வமாகும். மேலும் நம் இந்தியா நான்கில் 1 பங்கு சுமார் 25 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மனிதனின் தேவைக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply