500 Rupee Fake Note: ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 14.6% அதிகரிப்பு - RBI- யின் அதிர்ச்சி தகவல்

30ம் தேதி RBI வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் ரூ.500 மதிப்பிலான போலி நோட்டுகளின் (500 Rupee Fake Note) எண்ணிக்கை 14.6% அதிகரித்து  உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் போலி ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை  28% குறைந்துள்ளது. (i.e., 9,806 ஆக உள்ளது)

முந்தைய 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த 2023  ஆம் ஆண்டு ரூ. 20 நோட்டுகளில் 8.4%, ரூ. 500 (புதிய வடிவமைப்பு) நோட்டுகளில் 14.6% கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 100 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் 11.6% குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மொத்த போலி இந்திய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2021-2022 முந்தைய நிதியாண்டில் 2,30,971 ஆக இருந்து தற்போது 2022-23 நிதியாண்டில் 2,25,769 ஆக குறைந்துள்ளது என்று RBI குறிப்பிட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு 73.3%-தில் புழக்கத்தில் இருந்த ரூ.500 வங்கி நோட்டின் பங்கு, மார்ச் 2023 நிலவரப்படி 77.1 %-மாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் வங்கி முறை மூலம் கண்டறியப்பட்ட போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.6% அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், 100, 200 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 23ம் நிதியாண்டில் சரிந்தது.

இந்திய வங்கி அமைப்பில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டை விட 2022-23ல் ஓரளவு குறைந்துள்ளது. ரூ.500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அதிக பங்கை கொண்டுள்ளன. வங்கித் துறையில் இந்த  2022-23 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட மொத்த போலி இந்திய நாணயத் தாள்களில் (FICN – Fake Indian Currency Notes) 4.6% RBI வங்கியிலும் 95.4% மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக RBI தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply