540 Crore Investment Agreement With Edipan : ஸ்பெயின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டு ஒப்பந்தம்

ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு :

முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டு பயணம் சக்ஸஸ்ஸாக  அமைந்துள்ளது. அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் 06/02/2024 அன்று ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் (540 Crore Investment Agreement With Edipan) மேற்கொண்டுள்ளார். ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

540 Crore Investment Agreement With Edipan - எடிபன் நிறுவனம் :

தொழில்நுட்ப கல்வி பயிற்சிக்குறிய சாதனங்களை வடிவமைக்கும் எடிபன் நிறுவனமானது ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த எடிபன் நிறுவனமானது இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிரியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்குரிய ஆய்வக சாதனங்கள் மற்றும் ஆற்றல் சார்ந்த உபகரணங்கள் உற்பத்தி செய்து வருகின்றது. எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் (540 Crore Investment Agreement With Edipan) மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் வரும் காலத்தில் 500 பேர் முதல் 1000 பேர் வரை வேலைவாய்ப்பு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் :

முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஸ்பெயின் நாட்டிற்கு சென்று, அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். ஸ்பெயின் நாட்டின் பாரம்பரியப் பெருமை மிக்க கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்வதாக தனது பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முக்கியச் சந்திப்பு மற்றும் தான் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் ஹேப்பியாக, ”தொழில்துறை சம்பந்தமாக  ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் மேற்கொண்டேன். இந்தியாவில் உள்ள உற்பத்தி மையமான தமிழ்நாட்டின் எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் (540 Crore Investment Agreement With Edipan) தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மிகவும்  மகிழ்ச்சிக்குரியது”.

”இந்த ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டத்தில் நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் இது ஆகும். இதைப் போன்ற நல்ல பலனளிக்கும் முடிவுகளுடன், நான் இன்று 07/02/2024 ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன், உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், அது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நான் நன்றியுள்ளவனாவேன்” என்று கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் 07/02/2024 இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் பற்றி விவரமாக விளக்கம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply