54th International Film Festival : வெப் சீரிஸ்-ஓடிடி விருதுகள் முதல் முறையாக அறிமுகம்

20/11/2023 முதல் 28/11/2023-ஆம் தேதி வரை கோவாவில் சர்வதேச திரைப்பட விழா :

கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (54th International Film Festival) ஆனது நவம்பர் 20-ம் தேதி தொடங்கி உள்ளது. முதல் முறையாக இந்த 2023ஆம் ஆண்டு சிறந்த வெப் சீரிஸ்-ஓடிடி விருதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோவாவில் கோலாகலமாக தொடங்கிய 54th International Film Festival முழு விவரம் :

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா (54th International Film Festival) ஆனது நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் நடத்தப்படும் 14 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவானது திகழ்கின்றது. வெனிஸ், கேன்ஸ் மற்றும் பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் இந்தப் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஏ.பி.எஃப்-வால் அங்கீகரிக்கப்பட்ட பிற புகழ்பெற்ற விழாக்களாகும். நேற்று 20/11/2023 தொடங்கி வரும் 28/11/2023-ஆம் தேதி வரை இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா (54th International Film Festival) ஆனது நடைபெற உள்ளது.

20/11/2023 நேற்று தொடங்கிய தொடக்க விழாவில் மாதுரி தீக்ஷித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சல்மான் கான், ஏ.ஆர்.ரகுமான், ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தொடர்ந்து வரும் விழாவின் மற்ற நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளி ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20/11/2023 தொடங்கி வரும் 28/11/2023-ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்களில் 4 இடங்களில் நடைபெற உள்ள இந்த பிரமாண்ட விழாவில், 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும் அதில்,

  • 89 இந்திய திரைப்படங்கள்
  • 62 ஆசிய திரைப்படங்கள்
  • 10 சர்வதேச திரைப்படங்கள்
  • 13 உலக திரைப்படங்கள்

திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு இந்த விழாவில் ‘சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. முதல் முறையாக இந்த 2023-ஆம் ஆண்டு சிறந்த வெப் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வெப் சீரிஸ் பிரிவில் 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளை சேர்ந்த 32 வெப் சீரிஸ்கள் ஆனது திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 15 குறும்படங்கள் ஆனது கோல்டன் பீகாக் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3 இந்திய திரைப்படங்கள் கோல்டன் பீகாக் விருதுக்காக தேர்வாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த படங்கள் ஆனது இந்திய மொழி படங்கள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய பனோரமா பிரிவில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெற்றிமாறனின் ‘விடுதலை’, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘காதல் என்பது பொதுவுடைமை’, சம்யுக்தா விஜயன் இயக்கிய ‘நீல நிற சூரியன்’ ஆகிய படங்கள் பனோரமா பிரிவில் இடம்பிடித்துள்ளன. மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்” திரைப்படமும், சுதிப்தோ சென் இயக்கி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி” படமும் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

என்.எஃப்.டி.சி-யின் மேலாண்மை இயக்குநரும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான பிருதுல் குமார் உரை :

இந்த ஆண்டு நடைபெறும் 54-வது திரைப்பட விழா (54th International Film Festival) குறித்து தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான என்.எஃப்.டி.சி-யின் மேலாண்மை இயக்குநரும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான பிருதுல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உலக சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது” ஆனது ஐ.எஃப்.எஃப்.ஐ எனப்படும் இந்திய சர்வேதேசத் திரைப்பட விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று ஆகும்.

இந்த 2023ஆம் ஆண்டு தற்போது உலக சினிமாவின் மிகச்சிறந்த நபர்களில் ஒருவரான ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், இந்த மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற இருப்பதாக அவர் தெரிவித்தார். 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்,

  • ஐநாக்ஸ் பாஞ்சிம்
  • மக்வினெஸ் ஐநாக்ஸ் பாஞ்சிம்
  • மக்வினெஸ் பேலஸ்
  • ஐநாக்ஸ் போர்வோரிம் இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக்

ஆகிய 4 இடங்களில் திரையிடப்படவுள்ளன என்று அவர் கூறினார். இந்த ஆண்டு 54 வது விழாவில் (54th International Film Festival) சிறந்த வெப் சீரிஸ் (ஓடிடி) விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் ஐ.எஃப்.எஃப்.ஐ-ன் இந்த விழாவில் புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த 54 வது விழா ஆனது ஓடிடி தளங்களின் சிறந்த உள்ளடக்கத்தையும் அதன் படைப்பாளிகளையும் அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

10 மொழிகளில் இருந்து 32 பதிவுகள் ஆனது 15 ஓடிடி தளங்களில் இருந்து விருதுக்காக வந்துள்ளன என்றும் தேர்வு செய்யப்படும் சிறந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு நிறைவு விழாவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். பிருதுல் குமார் இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மோனிதீபா முகர்ஜி மற்றும் பிரக்யா பாலிவால் கவுர் போன்ற பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply