55 Stars Out Of The R136 Cluster : முதல் முறையாக R136 நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 55 நட்சத்திரங்கள் வெளியேறுகிறது

நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் சுமார் 1,58,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது ‘மாகெல்லானிக் கிளவுட்’ என்ற விண்மீன் கூட்டம். இதனுடைய மையப்பகுதியை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் R136 என பெயரிட்டு (55 Stars Out Of The R136 Cluster) அழைக்கின்றனர். இங்கு ஏராளமான புதிய நட்சத்திரங்கள் (Stars) உருவாகி வருகிறது. ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான மிட்செல் ஸ்டூப் தலைமையில் வானியலாளர்கள் கியா என்ற தொலைநோக்கியைக் கொண்டு இந்த ‘மாகெல்லானிக் கிளவுட்’ விண்மீன் கூட்டத்தை ஆராய்ந்து வந்தனர்.

55 Stars Out Of The R136 Cluster - 55 நட்சத்திரங்கள் வெளியேறுகிறது :

இந்த ஆராய்ச்சியில் R136 பகுதியிலிருந்து 55 நட்சத்திரங்கள் அதிவேகமாக வெளியேறுவதை கண்டுபிடித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஒரே நேரத்தில் இத்தனை நட்சத்திரங்கள் வெளியேறுவது இதுவே முதல்முறை என்கிறார்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகள். மேலும் வெளியேறும் இந்த நட்சத்திரங்களில் சில சூரியனை விடவே சுமார் 300 மடங்கு அளவில் பெரியவை என்கிறார்கள் வானியலாளர்கள். ஏன் இந்த நட்சத்திரங்கள் வெளியேறுகிறது என்று ஆராயும்போது அவர்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ‘மாகெல்லானிக் கிளவுட்டில்’ ஏற்பட்ட பெரிய வெடிப்புகளில் சில புதிய நட்சத்திரங்கள் உருவாகியதால் பழைய நட்சத்திரங்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் வெளியேற்றப்படும் இந்த நட்சத்திரங்கள் சில மணி நேரத்தில் சுமார் 62,000 மைல்களை கடந்து வேகமாக செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒலியின் வேகத்தை விட 80 மடங்கு அதிகமாகும். இவ்வளவு வேகமாக எங்கு  செல்கிறது என்று பார்த்தால் அதன் போக்கில் வெவ்வேறு திசையை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

கிரகங்களின் உருவாக்கத்தை பாதிக்கலாம் :

இந்த நட்சத்திரங்கள் விண்வெளியில் பயணிக்கும்போது அதன் பாதையில் உள்ள புதிய நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உருவாக்கத்தை பாதிக்கலாம் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது இந்த நட்சத்திரம் வெடித்தால் சுமார் 1000 ஒளி ஆண்டுகள் தூரம் வெடித்து சிதறும் என்கிறார்கள். வெளியேறிய இந்த 55 நட்சத்திரங்களையும் ஐரோப்பிய வானியலாளர்கள் (55 Stars Out Of The R136 Cluster) மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply