மொபைல் போன்களுக்கான 5G Auction

இந்திய நாடு முழுக்க மொபைல் போன்களுக்கான 5ஜி சேவையை விரிவாக்க வேண்டியுள்ள நிலையில் அதற்கான நிறுவனங்கள் ஆனது 5ஜி அலைக் கற்றைகளை ஏலத்தில் (5G Auction) எடுக்க இறங்கின. இதில் முதல் நாளிலேயே ரூபாய் 11,000 கோடி மதிப்புள்ள அலைக் கற்றைகளை ஏலத்தில் எடுப்பதாக கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஏலத்தில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவுக்கு அலைக் கற்றைகளை ஏலம் எடுத்து உள்ளது.

கடந்த  செவ்வாய் (02.07.2024) ஏலத்தின் முதல் நாளன்று, ஐந்து சுற்று ஏலம் ஆனது நடந்தது. ஆனால், ஏலத்தின் இரண்டாம் நாளான 03.07.2024 அன்று, முந்தைய நாளான 02.07.2024-ளை விட ஆர்வம் குறைவாக இருந்த காரணத்தினால், காலை 11:30 மணிக்கே ஏலம் ஆனது முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளான 02.07.2024 அன்று எடுக்கப்பட்ட ஏலத்தை விட, இரண்டாம் நாளான 03.07.2024 அன்று எடுக்கப்பட்ட ஏலத்தின் மதிப்பு ஆனது கூடவும் இல்லை மற்றும் குறையவும் இல்லை. மொத்தம் நடந்து முடிந்த ஏலத்தின் ஏழு சுற்றுகளில் 140 முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு பெறப்பட்டுள்ளது.

02.07.2024 மற்றும் 03.07.2024 ஆகிய இரண்டே நாட்களில் '5ஜி' அலைக்கற்றை ஏலம் (5G Auction) முடிந்தது :

  • இந்த ஏலத்தில் Jio நிறுவனம் ஒட்டுமொத்தமாக 24,740 MHz அலைக்கற்றைகளை ரூபாய் 88,078 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. அனைத்து ஏலங்களிலும் கிட்டத்தட்ட பாதியை முகேஷ் அம்பானியின் Jio நிறுவனம் எடுத்து உள்ளது.
  • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். பார்தி ஏர்டெல் ஆனது 19,867.8 MHz அலைக்கற்றைகளை ரூபாய் 43,084 கோடிக்கு ஏலத்தில் எடுத்து உள்ளது.
  • வோடபோன் ஐடியா நிதிச் சிக்கலில் உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது 6,228 MHz அலைக்கற்றைகளை ரூபாய் 18,799 கோடிக்கு ஏலத்தில் எடுத்து உள்ளது.

அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஒரு புதிய நிறுவனம் ஆகும். அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் தனது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக 400 MHz அலைக் கற்றையை ரூபாய் 212 கோடிக்கு எடுத்து உள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உரை :

இந்த அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்த பிறகு பேசிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்திலிருந்து 80,000 கோடி ரூபாய் முதல் 1,00,000 கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 1,50,173 கோடி ரூபாய் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்திலிருந்து கிடைத்திருக்கிறது. இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் (5G Auction) எடுத்தவர்களுக்கு விரைவில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் 2024-ன் அக்டோபருக்குள் இந்தியாவில் 5ஜி சேவை துவங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply