5th Richest Person In The World : உலக பணக்காரர் பட்டியலில் 5ம் இடம் பிடித்த ஸ்டீவ் பால்மர்

Bloomberg Billionaires Report :

5th Richest Person In The World : ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பல அமைப்புகள் வெளியிட்டுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் Bloomberg Billionaires Report ஒன்றை வெளியிட்டுள்ளது. Bloomberg Billionaires வெளியிட்டுள்ள அந்த உலக பணக்காரர் பட்டியலில் 5ம் இடம் பிடித்த ஸ்டீவ் பால்மர் என்பவர் பில்கேட்சின் முன்னாள் உதவியாளர் ஆவார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பால்மர் 5வது இடத்துக்கு முன்னேறி (5th Richest Person In The World) உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த உலக பணக்காரர்களின் சொத்து பட்டியல் விவரங்கள் பின்வருமாறு :

  • ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் No 1 – எலான் மஸ்க் 193 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
  • LVMH Moet Hennessy – Louis Vuitton தலைவரும், சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட்  No 2 – பெர்னார்ட் அர்னால்ட் 156 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
  • அமேசான் நிறுவனரும், சிஇஓவுமான ஜெஃப் பெசோஸ் 3 – 156 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் No 4 – பில்கேட்ஸ் 122 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
  • ஸ்டீவ் பால்மர் No 5 – ஸ்டீவ் பால்மர் 117 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஐயந்தாம் இடத்தில் உள்ளார்.
  • Oraccle சாப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி எலிசன் No 6 – லாரி எலிசன் 114 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார். 
  • வாரன் பஃபெட் No 7 – வாரன் பஃபெட் 113 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தில் உள்ளார். 
  • பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் No 8 – மார்க் ஜுக்கர்பெர்க் 110 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

தற்போது ஸ்டீவ் பால்மர் 5வது இடத்தில் உள்ளது (5th Richest Person In The World) அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில்  உள்ள உலக பணக்காரர்கள் அனைவரும் தங்களுக்கென்று சொந்தமான நிறுவனங்களை  பல வருடங்களாக நடத்தி வருகின்றனர்.. ஆனால் ஸ்டீவ் பால்மர் குறுகிய காலத்தில்  5வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார் மற்றும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

5th Richest Person In The World - பணக்காரர்களின் வரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவ் பால்மர் பற்றிய விவரங்கள் :

1980-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஸ்டீவ் பால்மர் பணிக்கு சேர்ந்தார். அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முக்கிய நபராக  ஸ்டீவ் பால்மர் அறியப்பட்டார். அந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க 30  முக்கிய நபர்களில் இவரும் ஒருவரானார்.  ஸ்டீவ் பால்மர், விண்டோஸ், எம்எஸ் ஆபிஸ் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்காற்றினார். ஸ்டீவ் பால்மர் 2000ல் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட தொடங்கினார். மைக்ரோசாப்ட்  ஆனது அவரது தலைமையின் கீழ், விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு உள்ளிட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ட் ஆனது அவரது பதவிக்காலத்தில் புதிய உச்சம் தொட்டது. மேலும் கேமிங் துறையில் மைக்ரோசாப்ட் நுழைவதற்கான அடித்தளத்தையும் ஸ்டீவ் பால்மர் செய்தார். இதற்காக ஸ்டீவ் பால்மர் எக்ஸ்பாக்ஸ் கேமிங் கண்சோல் அறிமுகம் செய்தார். ஸ்டீவ் பால்மர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து 2014ல் வெளியேறினார்.

ஸ்டீவ் பால்மர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டில் ஸ்டீவ் பால்மரின் முதலீடுகள் மீதான லாபம் ஆனது கிடுகிடுவென  உயர்ந்தது. இந்த 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் 30 பில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார். இந்த லாபகரமான வளர்ச்சி ஆனது அவரை உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னேற்றமடைய செய்துள்ளது. உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஆனது அவர்களின் முதலீடுகள் லாபத்தை தரும் பட்சத்தில் கிடுகிடுவென உயரும் மற்றும் நஷ்டம் அடையும் காலத்தில் அவர்களின் சொத்து மதிப்பு என்பது கிடுகிடுவென குறையும். ஒவ்வொரு ஆண்டும் பல அமைப்புகள் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களை மாற்றங்களை கொண்டு கணக்கிட்டு பட்டியலிடுகின்றன.

Latest Slideshows

Leave a Reply