6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. இது போன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் கோள்கள் ஒரே பார்வையில் சந்திக்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படும். அந்த வகையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து (6 Planets Aligning In Same Time) வரும் அரிய நிகழ்வு இன்று ஜனவரி 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

6 கோள்கள் வானில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு (6 Planets Aligning In Same Time)

6 Planets Aligning In Same Time - Platform Tamil

வியாழன் (Jupiter), வெள்ளி (Venus), சனி (Saturn), செவ்வாய் (Mars), நெப்டியூன் (Neptune) மற்றும் யுரேனஸ் (Uranus) கோள்கள் ஒரே நேர்கோட்டில் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றில் வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களாலும், நெப்டியூன், யுரேனஸ் கோள்களை (6 Planets Aligning In Same Time) தொலைநோக்கியின் மூலமாக மட்டுமே பார்க்க முடியும். தற்போது ஒரே நேரத்தில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக இந்தியா முழுவதும் அறிவியல் அமைப்பு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு

இந்த அரிய நிகழ்வை தொலைநோக்கி மூலமாக பொதுமக்கள் காணும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை தினமும் (6 Planets Aligning In Same Time) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது இந்த 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரவில்லை எனவும், பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை தருகின்றன எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற கோள்களின் அணிவகுப்பு நிகழ்வானது மீண்டும் பிப்ரவரி 28, 29-ம் தேதிகளில் மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply