64 Years Of Kamal Haasan : கமல்ஹாசனை சிம்மாசனத்தில் அமர்த்திய ஸ்ருதிஹாசன்…
கோலிவுட்டின் உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். இவர் தற்போது 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவரது மகள் ஸ்ருதிஹாசன் போட்டுள்ள ட்விட்டர் பதிவும் போஸ்டரும் வைரலாகி வருகிறது.
64 Years Of Kamal Haasan :
கமல்ஹாசன் (64 Years Of Kamal Haasan)1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என பால் வடியும் முகத்துடன் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கமல், பின்னாளில் ஹாலிவுட்டுக்கே சவால் விடுவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர், உதவி இயக்குனர், கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என திரையுலகில் கமல்ஹாசன் தொடாத இடமில்லை,சாதிக்காத சாதனையும் இல்லை. சிவாஜிக்குப் பிறகு, சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழின் கலைஞராக கமல்ஹாசன் காணப்படுகிறார். நடிகராக கமலின் புதிய முயற்சிகள் தமிழில் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது.
16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை பட்டியலிடுவது மிகவும் கடினமாக இருந்தது. கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 63 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் கமல் 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக கமல் ரசிகர்கள் 64இயர்ஸ் ஆஃப் கமல், கமலிஸம் என ஏராளமான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் போஸ்டருடன் ட்விட் செய்துள்ளார். அதில் அவர் ட்வீட் செய்துள்ளதாவது, பல்வேறு ஏற்றத் தாழ்வு, வெற்றி, சவால்கள் என அனைத்தையும் கண்ட உலக நாயகனின் அயராத முயற்சிக்கு இடையில் எதுவும் வர முடியாது. 6 தலைமுறைகளாக திரையுலகின் இணையற்ற பேரரசர் கமல். சினிமாவில் தனது 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்’ என ட்வீட் செய்துள்ளார். முக்கியமாக இந்த ட்விட்டர் பதிவில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள கமலின் போஸ்டர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிம்மாசனத்தில் கமல் அமர்ந்திருப்பது போல், ரசிகர்கள் பட்டாளமே சூழ்ந்து கோஷமிடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்
-
Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்