71st Miss World Pageant : இந்தியாவில் 71 ஆவது உலக அழகிப்போட்டி

71st Miss World Pageant - செக் குடியரசு பெண் கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடினார் :

செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகி போட்டியில் (71st Miss World Pageant) மகுடம் சூடியுள்ளார். 1951 ஆம் ஆண்டு முதல் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு உலக அழகி பட்டத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது.

இந்தியாவில் 71 ஆவது உலக அழகிப்போட்டி :

இந்தியாவில் 28 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் 71வது உலக அழகிப்போட்டி (71st Miss World Pageant) கடந்த மாதம் 18/02/2024-ல் தொடங்கியது. டெல்லியில் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய 71வது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று மார்ச் 9ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டி ஆனது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. இந்த போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த 117 பேர் கலந்து கொண்டனர். இதன் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்ளிட்ட 14 பேர் தகுதி பெற்று பங்கேற்றனர். இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு மாதத்திற்கு இந்த போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் ஆனது நடத்தப்பட்டது. தற்போது போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகியாக இருக்கிறார்.

Miss World அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி, “இந்தியாவில் 71வது உலக அழகி இறுதி போட்டியை (71st Miss World Pageant) நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம்” என தெரிவித்து உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் உலக அழகி கரோலினா பேசுகையில், “இந்தியாவைப் போல உபசரிக்கும் இன்னொரு நாட்டை பார்க்க முடியாது. உலக அழகிக்காக நான் பெற்ற கிரீடத்தை உலக அழகிக்கு நிகரான மதிப்புகளை கொண்ட இந்த அழகான இந்திய நாட்டில் வெல்ல போகும் இன்னொரு வெற்றியாளருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் என் தாய் வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார். இதுவரை உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் பட்டியல்,

  • ரீட்டா ஃபரியா (1966)
  • ஐஸ்வர்யா ராய் (1994)
  • டயானா ஹெய்டன் (1997)
  • யுக்தா முகே (1999)
  • பிரியங்கா சோப்ரா (2000)
  • மனுஷி சில்லர் (2017)

தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு பட்டம் வென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை (71st Miss World Pageant) வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவாவிற்கு சூட்டினார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். உலக அழகி போட்டியின் டாப் 8 பிரிவில் இடம்பெற்ற சினி ஷெட்டி இந்தியா சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு திரைத்துறை பிரபலங்கள், மாடல்கள் இந்த உலக அழகி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Latest Slideshows

Leave a Reply