75th Republic Day : டெல்லியில் தேசிய கோடியை ஏற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா (75th Republic Day) கோலாகலமாக நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இன்று காலை 10.36 மணிக்கு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

75th Republic Day - தேசிய கொடியேற்றிய குடியரசுத் தலைவர் :

குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டின் சக்தி வாய்ந்த முப்திகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழக்கமாக காலையில் நடக்கும் அணிவகுப்பு இம்முறை கடும் பனிமூட்டம் காரணமாக சற்று தாமதமானது. இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் (75th Republic Day) சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்றார். திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றியபோது, ​​பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர். திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றியபோது, ​​மாவாவில் திரண்டிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் முப்படையினரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரமாண்ட அணிவகுப்பு :

அணிவகுப்பில் ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்று பல சாகசங்களை நிகழ்த்தினர். குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றிய பின், இந்திய ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைத்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, ராஷ்ட்ரபதி பவன் முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நினைவு தூணில் பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். இந்த ஆண்டு குடியரசு தின (75th Republic Day) கொண்டாட்டத்தில் நாட்டின் பெண் சக்தி மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டன.

சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக முப்படைகளின் மகளிர் பிரிவுகள் பங்கேற்றன. பினாகா ராக்கெட் சிஸ்டம் மற்றும் குண்டுகளை கண்டரையும் ரேடார் அமைப்புடன் ராணுவ தளவாடப் பிரிவில் நியமிக்கப்பட்ட முதல் 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா மற்றும் பிரியங்கா சேவ்தா ஆகியோர் அடங்குவர். 100க்கும் மேற்பட்ட பெண் இசைக்கலைஞர்கள் வழக்கமான ராணுவப் பிரிவு இசைக் கருவிகளுக்குப் பதிலாக நாதஸ்வரம், நாகடா போன்ற இந்திய இசைக்கருவிகளை வாசித்தனர். இந்திய விமானப்படையின் 15 பெண் விமானிகள் வான்வழி சாதனைகளை நிகழ்த்தினர். இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து பங்கேற்ற அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சில மாநிலங்களில் அலங்கார வாகனங்கள் விடுபடுவது சகஜம்தான். டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் இம்முறை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply