77th Independence Day 2023: சுதந்திர தின பெருவிழா 2023

1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரிட்டன் பேரரசின் 200 ஆண்டுகால அடிமையில்  இருந்து இந்தியா அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்றது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியர்கள் சுதந்திரம் பெரும் வரை சுதந்திர போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த ஆயிரக்கணக்கான வீரமிக்க தேசபக்தர்களின் தன்னலமற்ற தியாகங்களை போற்றும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் சுதந்திர தினம் 1947 ஆகஸ்ட் 15 இல் கொண்டாடப்பட்டது. நமது சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கொடியை இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் செங்கோட்டையில்  தேசிய கொடியை  ஏற்றினர்.

77th Independence Day 2023 : 2023-இல் சுதந்திர தினம்

ஒவ்வொரு  ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து பள்ளிகள், அரசு ஆலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், மூடப்பட்டிருக்கும்,மற்றும் இது பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 77 சுதந்திர தினத்தை (77th Independence Day 2023) நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை  ஏற்றினார். 

சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 தேதி, இந்திய நாட்டில் சுதந்திரம் மற்றும் சுதந்திரதின் உண்மையான உணர்வை கொண்டாட சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தலைநிமிர்ந்து நின்று காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதிற்க்காக தங்களது உயிரை கொடுத்த  சுதந்திர போராட்ட வீரர்களுக்கு  வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வந்த  இந்தியாவை நினைவு கூறும் வகையில் சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.மேலும்  சுதந்திர தின விடுமுறை என்பது தேசிய உணர்வாகும். இது நாட்டின்  ஒவ்வொரு குடிமகன் மத்தியிலும் பெருமை மற்றும் தேசபக்தி உணர்வை   ஏற்படுத்ததும்.

சுதந்திர தினம் எப்படி கொண்டாடப்படுகிறது?

ஆகஸ்ட் 15 க்கு முந்தைய நாட்களில், சுதந்திர தினம் வரப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடியும். அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள் ஆகிய இடங்களில் தேசிய வண்ணங்களில் விளக்கு ஒளிரும். இந்த நாளில்,தேசிய கொடி மிகவும் தகுதியான கவனத்தையும் அன்பையும் பெறுகிறது.  மேலும் பள்ளிகள், அரசு ஆலுவலகங்கள்,மெட்ரோ இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும். 

செங்கோட்டையில் கொடி ஏற்றம்:

  தற்போது இந்தியாவின் 14 வது பாரத பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்கள் இந்திய ஆயுத படையிடமிருந்து  21 துப்பாக்கி குண்டுகள் முயங்க மூவர்ண கொடியை ஏற்றுவார்.மேலும் இந்தியாவின் முப்பெரும் படைப்பிரிவுகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த கொண்டாட்டத்திற்கு இடையே பாரத பிரதமர் அவர்களின் உரையும் அடங்கும். அங்கு பாரத பிரதமர் தேசத்தின் முன்னேற்றம் மற்றும் நலன்களை பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 

எல்லையில் சுதந்திர தினம் கொண்டாட்டம் :

 இந்தியாவின் எல்லையான “வாகா எல்லை” பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் உள்ளது. இந்த வாகா எல்லையானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டிற்கும் பொது எல்லையாக உள்ளது. அங்கு,  சுதந்திர தினத்தன்று இரு நாட்டு வீரர்களும்  தங்களது  சுதந்திர தின வாழ்த்தை கூறி இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள்.மேலும் வாகா எல்லையில்   “பீட்டிங்  தி  ரிட்ரீட்” விழா பார்ப்பதற்கு விருந்தளிக்கும். மேலும் வாகா எல்லை செயற்கை மூவர்ண விளக்கு ஏற்றப்பட்டவுடன் வாகா எல்லையில் உள்ள காட்சிகள் அழகாக விருந்துதளிக்கும்.

நிறைவுரை :

நமது சுதந்திர  இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கைகளில் அடிமையாக இருந்து இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்நிலையில் நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை கொண்டாடுவது இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தியா இன்று (77th Independence Day) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply