80's Buildup Trailer : சந்தானம் நடித்துள்ள "80's பில்டப்" படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சந்தானம் நடித்து வரும் “80’s பில்டப்” படத்தின் ட்ரெய்லர் (80’s Buildup Trailer) தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. பல தோல்விகள் வந்தாலும் மனம் தளராத சிங்கம் சந்தானம். ஹீரோவாக வலம் வந்த பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியைத் தருகின்றன. அதில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ஞானவேல்ராஜா இயக்கத்தில் “80’s பில்டப்” படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சன் டிவியின் பூவே உனக்காக்கா சீரியலில் கதாநாயகியாக தோன்றிய ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், மொட்ட ராஜேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ் என பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது.

80's Buildup Trailer :

காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் (80’s Buildup Trailer) தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே சந்தானம் கமலின் தீவிர ரசிகராக இருப்பது போல காட்டப்படுகிறார். அதைத் தொடர்ந்து அவரது தாத்தா சுந்தர்ராஜன் இறந்துவிடுகிறார். முழு ட்ரெய்லரும் அதை வைத்தே நகர்கிறது. இறப்பு வீட்டிற்கு வரும் கதாநாயகியுடன் சந்தானம் டூயட் பாடுவது போல ட்ரெய்லர் (80’s Buildup Trailer) தொடங்குகிறது. குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் சுந்தர்ராஜனின் உயிரை எடுக்க அவர் செய்யும் முயற்சி, பெண் வேடத்தில் வரும் ஆனந்தராஜ் என ஒவ்வொரு காட்சியும் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. இப்படி வெளிவந்துள்ள ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அலப்பறை காட்ட இருக்கும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ட்ரெய்லர் (80’s Buildup Trailer) இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply