8600 Year Old Piece Of Bread : துருக்கியில் சுமார் 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கெட்டு போகாத ஏசு காலத்திற்கும் முந்தைய 8600 ஆண்டு பழைய ரொட்டி – மிரண்ட ஆய்வாளர்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் உலகின் பழமையான ரொட்டியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்களால் நம்பவே முடியாத கெட்டு போகாத ஏசு காலத்திற்கும் முந்தைய 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு (8600 Year Old Piece Of Bread) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரொட்டித் துண்டை துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில்  துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பழமையான ரொட்டியை (8600 Year Old Piece Of Bread) கண்டுபிடித்துள்ளனர். இந்த ரொட்டி துண்டு ஆனது “மேகன் 66” என்ற பழங்கால மண் செங்கல் வீடுகளால் சூழப்பட்ட பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த மைக்ரோவேவ்-ன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ரொட்டி துண்டு ஆனது வட்டமாகவும் மற்றும் பஞ்சு போலவும் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ரொட்டித் துண்டை ஆய்வு செய்து பார்த்த போது அது 8,600 ஆண்டுகள் பழமையான, சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்பது (8600 Year Old Piece Of Bread) கண்டறியப்பட்டுள்ளது. துருக்கியிலுள்ள அனடோலு பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி உமுட் துர்க்கான் இந்த ரொட்டித் துண்டை குறித்து கூறுகையில், “கேடல்ஹோயுக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ரொட்டி துண்டு தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி ஆகும். அந்த ரொட்டியின் மிகச் சிறிய அளவு மட்டும்தான் தற்போது கிடைத்து இருக்கிறது. இந்த ரொட்டி துண்டின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் ஆனது இருக்கிறது. இந்த ரொட்டி துண்டு ஆனது சமைக்கப்படவில்லை. ஆனால் இந்த ரொட்டி துண்டு ஆனது புளிக்கவைக்கப்பட்டு, உள்ளே மாவுச்சத்துகள் அப்படியே இருப்பதால் இப்போது வரை நன்றாக இருக்கிறது. இது ஏசு காலத்திற்கும் முந்தையது ஆகும். இதுநாள் வரை இதைப்போன்ற அதிசயத்தை யாரும் கண்டுபிடித்ததே இல்லை” என்றார்.

8600 Year Old Piece Of Bread :

மைக்ரோஸ்கோப் மூலமாகவும் இந்த ரொட்டித் துண்டை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஸ்கேனிங் மூலமாக பெற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியின் படங்களின் மாதிரிகளில் காற்று இடைவெளி இருப்பது நன்றாக தெரிகிறது. மேலும் ஸ்டார்ச் துகள்களும் அந்த ரொட்டித் துண்டுகளில் உள்ளது. இந்த ஆய்வு  மூலம் அந்த ரொட்டி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகின்றது. மாவையும் தண்ணீரையும் இணைத்து இந்த ரொட்டித் துண்டைச் செய்துள்ளனர். இந்த ரொட்டித் துண்டை அடுப்புக்கு அருகில் கொஞ்ச நாட்கள் அப்படியே வைப்பதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது.

இந்த ரொட்டித் துண்டு கண்டுபிடிப்பானது துருக்கிக்கும் மற்றும் உலகிற்கும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ரொட்டித் துண்டின் மேலே களிமண்ணின் ஒரு மெல்லிய அடுக்கு இருந்துள்ளது. அந்த களிமண்ணின் ஒரு மெல்லிய அடுக்கே இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ரொட்டியை பாதுகாத்து வந்துள்ளது. நெட்டிசன்கள் பலரையும்  இத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ரொட்டித் துண்டு (8600 Year Old Piece Of Bread) ஆனது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply