9 Karat Gold : இந்தியாவில் 9 Karat தங்கம் அறிமுகமாகிறது

9 Karat Gold :

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த 2024 ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை ஆனது 1.5% அதிகரித்துள்ளது. இந்தியாவில் வரும் 2025 ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை ஆனது 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஆனது 2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 Karat  தங்கத்திற்கு (9 Karat Gold) ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர். 

இந்த 9 Karat Gold முடிவு ஆனது தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனையை தொடர்ந்து  எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு ஆனது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி 9 Karat தங்கப் பொருட்களை வாங்குபவர்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் ஆனது வழங்கப்படும். தற்போது 14 Karat தங்கம் ஆனது தங்க சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் மலிவு விலை தங்கம் நுகர்வோர் மத்தியில் 9 Karat Gold ஆனது நல்ல ஆதரவை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 9 Karat தங்கத்திற்கு விரைவில் ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி வழங்கப்பட உள்ளது. Karat என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும். பொதுவாக இந்த Karat என்பது  எப்போதும் 9 மற்றும் 24க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். இந்த Karat எண் அதிகமாக இருந்தால், அந்த தங்கம் ஆனது தூய்மையான தங்கம் ஆகும்.

  • 24 Karat தங்கம் – தூய தங்கம் ஆகும். வேறு எந்த உலோகமும் இல்லை.
  • 22 Karat தங்கம் – 67% தூய தங்கம் ஆகும். செம்பு, துத்தநாகம், வெள்ளி மற்றும் நிக்கல் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படும். 
  • 18 Karat தங்கம் – 75% தங்கம் ஆகும். 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள் ஆகும்.
  • 14 Karat தங்கம் – 58.33% தூய தங்கம் ஆகும். 41.67% மற்ற உலோகங்கள்.
  • 9 Karat Gold என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் அமைவிடமாக இந்தியா இருப்பதால் 9 Karat Gold தூய்மை குறைவான தங்கமாக இருந்தாலும் எல்லோராலும் வாங்கும் வகையில் மிக குறைவான விலையில் இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply