A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
சில அரசு ஊழியர்கள், பணி சார்ந்தும், பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற பிறகும் தன்னால் இயன்ற அளவுக்கு மக்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை தங்கள் கடமையாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தாங்கள் வகிக்கும் பதவியைப் பற்றி பெருமைப்பட்டு, முன்னுதாரணமாக, மக்கள் மனதில் உண்மையான ஹீரோக்களாக மாறுகிறார்கள். இறை (தெய்வம்/அரசன்) அன்பை தன் பெயரிலேயே வைத்திருக்கும் ஒருவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்!
A Journey Of Ten Thousand Miles புத்தகம் பற்றி கருத்து

வழக்கமான கட்டுரைகள் எனில் சென்று வந்த நாடுகள், அங்குள்ள சிறப்பு வாய்ந்த வரலாற்றுத் தலங்கள், புகழ்பெற்ற கோயில்கள், இயற்கைக் காட்சிகள், மக்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உணவு என அவர் அனுபவித்த சுவையான, இனிமையான, விரும்பத்தகாத அனுபவங்களைச் சொன்னால் அது எழுதப்படாத இலக்கணம். இறையன்புவின் பயணக்கட்டுரையில் உணவுப்பொருட்கள், மருந்துகள், சிகிச்சை முறைகள், பானங்கள், உடைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன. அவை எவ்வாறு பயணம் செய்து ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வந்தன என்பதை ஆய்வு செய்துள்ளார். இது தவிர, நாற்பத்தைந்து கட்டுரைகளில் மனிதர்களின் ஆபத்தான, பேரழிவு மற்றும் நாட்டைக் கண்டறியும் பயணங்களையும் விவரித்துள்ளார்.
உதாரணத்திற்கு
குதிரைகளுடன் தொடர்புடையது : பாபர் முதன்முதலில் காண்டாமிருகத்தைப் பார்த்தபோது, ’அது குதிரை போல் தெரிகிறது’ என்றார். (அது எப்படி நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது) உண்மையில் காண்டாமிருகம் குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நுட்பமான அறிவினால் தான் 14 வயதில் அரசரானார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாவீரன் அலெக்சாண்டர் வந்தார். சிறுவனாக இருந்தபோது, யூசபேலஸ் என்ற அடக்க இயலாத முரட்டுக் குதிரை தன் நிழலை பார்த்தே பயப்படும் அதன் பலவீனத்தை அறிந்து அதன் முகத்தைத் திருப்பி சவாரி செய்து வெற்றிக் கொண்டார். முப்பது வயது கொண்ட அந்த குதிரை இந்திய மன்னன் போரஸோடு போர் செய்யும்போது இறந்தது. அதனை ராணுவ மரியாதையுடன் அதை அடக்கம் செய்தார். நம் நாட்டு ராணா பிரதாப் சிங் அக்பருடன் போரிட்டபோது, குட்டி யானையின் கவசத்தை, தன் பிரியமான குதிரையான ‘சேத்தக்’ முகத்தில் போட்டு எதிரிகளை குழப்பினார். போரில் பலத்த காயம் அடைந்த அவரைக் காப்பாற்றி நீண்ட கால்வாயின் குறுக்கே அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தார். கடமையை நிறைவேற்றும் போதே உயிர் இழந்தார். இன்றும், அதன் கல்லறை ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ராஜஸ்மண்ட்’ என்ற இடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது வரலாறு தொடர்பானது. ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நாய் சைசில் பூமியில் திரிந்த விலங்குகளுக்கு முன்னங்காலில் நான்கு குளம்புகளையும், பின்னங்காளில் மூன்று குளம்புகளையும் கொண்டிருந்தன. பின்னர், அவை படிப்படியாக மாறி குதிரை வடிவம் பெற்றன. இது குதிரைகளைப் படிக்கும் அறிவியல் முறை. இன்னும் புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் குதிரைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தொகுத்து அளித்துள்ளார். ஆசிரியர் வெ.இறையன்பு எழுதிய இந்த பத்தாயிரம் மைல் பயணம் புத்தகத்தை (A Journey Of Ten Thousand Miles) படிக்க நீண்ட நாட்கள் ஆகலாம். பிராயணத்துடன் இந்த நூலை எடுத்துச்சென்றால் நிச்சயமாக அந்தந்த ஊரைப்பற்றிய மேலதிக தகவல்களுடன் பயணத்தை இனிமையாக்கும் என்பதில் ஐயமில்லை.
Latest Slideshows
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller
-
First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது