A Private Hospital For The Elderly : சென்னையில் முதல்முறையாக முதியோருக்காக ஒரு தனி மருத்துவமனை

A Private Hospital For The Elderly :

சென்னையில் முதல்முறையாக தேசிய முதியோர் மருத்துவ நல மையம் (A Private Hospital For The Elderly) திறக்கப்பட்டுள்ளது. இது சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக தேசிய முதியோர் மருத்துவமனை ஆனது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய முதியோர் மருத்துவமனை ஆனது ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் தேசிய முதியோர் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (முதியோர் மருத்துவமனை) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆனது மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி தேசிய முதியோர் மருத்துவமனை அமைக்க சென்னை கிண்டியில் உள்ள நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய (கிங் இன்ஸ்டிடியூட்) வளாகத்தில் 10 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. தேசிய முதியோர் மருத்துவ மனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச்செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் குழுவினர் பார்வையிட்டு திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்து மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை (A Private Hospital For The Elderly) ரூ.150 கோடியில் 200 படுக்கை வசதிகளுடன் மத்திய அரசின் 100 சதவீத நிதியில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களான எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுன்ட், ஸ்கேன் போன்ற வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பு துறைகள் ஆனது சிறப்பு டாக்டர்களைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் முதியோருக்கான சிகிச்சை மட்டுமின்றி, முதியோர் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பும் வழங்கப்பட உள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் முதியோர் மருத்துவ டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆனது இங்கே அளிக்கப்படும்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தின் மொத்த 50 ஏக்கர் பரப்பளவில் 10 ஏக்கரில் மருத்துவமனை அமைந்துள்ளது. சுற்றிலும் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டப்படாமல் இயற்கைச் சூழலுடன் மருத்துவமனை (A Private Hospital For The Elderly) அமைந்துள்ளது. முதியவர்களுக்கு வயது முதிர்வு காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால், முதியவர்களுக்கு சிகிச்சை மட்டுமின்றி அதற்கும் மேலான பல்வேறு வசதிகள் ஆனது இங்கு செய்து தரப்படும். முதியவர்கள் ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நூலகம் மட்டுமல்லாமல் கேரம் போர்டு, செஸ் பலகைகள், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இங்கு சிகிச்சைக்கு வரும் முதியோர்களுக்கு அட்மிஷன் அட்டை வழங்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply