A2B is Gearing up for an IPO launch : IPO வெளியீடுவதற்கு A2B தயாராகி வருகிறது

இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவகங்கள் ஆனது பல இடங்கள் மற்றும் பல நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் மற்றும் தமிழ்நாட்டு உணவுகளை விரும்பும் வெளிநாட்டினரையும் பெரிய அளவில் கவர்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆனது தனது வியாபாரத்தை உலகம் முழுவதும் விரிவுப்படுத்த உள்ளதாக தகவல்கள் (A2B is Gearing up for an IPO launch) வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் அடையாறு ஆனந்த பவன் எனும் A2B ஆனது ஸ்வீட்ஸ் மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு பிரபலமான ஒரு கடை ஆகும். வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமான நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பிரபலமான ஹோட்டல் நிறுவனமாக செயல்பட்டு வரும் அடையார் ஆனந்த பவன் (A2B) நிறுவனம் 1960 ஆண்டு ராஜபாளையத்தில் ஸ்ரீ குரு ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஒரு சிறிய இனிப்பு கடையாகத் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமான உணவக ஹோட்டல் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

A2B is Gearing up for an IPO launch - அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி இலக்கு :

இந்த நிலையில் அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஸ்ரீனிவாச ராஜா தனது வணிகத்தை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஸ்ரீனிவாச ராஜா IPO வெளியீடுவதற்கு தயாராகி (A2B is Gearing up for an IPO launch) வருவதாக தெரிவித்துள்ளார். சமீப காலமாக தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆனது இந்திய உணவகங்கள் மற்றும்  உணவுப் பொருட்களின் நிறுவனங்கள் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்த முடிவு செய்து அடையார் ஆனந்த பவன் நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை நன்றாக விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த அடையார் ஆனந்த பவன் நிறுவனம் தங்கள் வசம் இருக்கும் தங்களது பங்குகளை விற்பனை செய்து 1000 முதல் 1200 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட  திட்டமிட்டுள்ளது.

இந்தியா மற்றும் 3 வெளிநாடுகளில் சிறப்பாக இயங்கி வரும் இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் IPO வெளியிட அடையார் ஆனந்த பவன் முடிவு செய்துள்ளது. அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி வருமானத்தை அடைவதை இலக்காக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக அடையாறு ஆனந்த பவன் மேலாண்மை இயக்குநரான ஸ்ரீனிவாச ராஜா கூறியுள்ளார். ரூ.10,000 கோடி வருமான இலக்கை நோக்கமாக கொண்டு அதற்காக IPO வெளியிட்டுக்கு தயாராகி வருவதாகவும் (A2B is Gearing up for an IPO launch)  ஸ்ரீனிவாச ராஜா தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply