Aadhar Card Loan: ஆதார் போதும் ஆவணங்கள் எதற்கு? - எளிதில், விரைவில் கடன்
பொதுவாக வங்கிகலிருந்து தனிநபர் கடனைப் பெற மக்கள் தங்களது முகவரி, சொத்து மதிப்பு மற்றும் அடையாளச் சான்று என பல விதமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். தற்போது வெறும் ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை எளிதாக விரைவில் பெறலாம். இப்போது பேங்க்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி KYC செய்யலாம். அதன் முறை மிகவும் எளிமையானது.
கடன் விண்ணப்பதாரர்கள் கிரெடிட் ஸ்கோர் ஆனது 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதனால் கடன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு தங்களது கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க வேண்டும்.
ஆதார் கார்டு-ன் உதவியுடன் பர்சனல் லோன் அப்ளை செய்வது மிகவும் எளிது. அப்ளை செய்த பின் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் ஆனது 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும் மற்றும் உடனடியாக பேங்க் அகவுன்டில் பர்சனல் லோன் தொகை ஆனது விநியோகிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆனது மிகவும் எளிமையானது.
ஆதார் அட்டை மட்டும் வைத்து வங்கிகள் கடன் வழங்குகின்றன. குறிப்பாக,
- State Bank of India
- HDFC Bank
- Kodak Mahendra Bank போன்ற பல வங்கிகள் இந்தியாவில் ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் வழங்குகின்றன.
Aadhar Card Loan - தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
- மக்கள் தங்கள் ஆதாரை பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பிக்க தங்களது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். (பேங்க்ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்க்கவும்.)
- வங்கியின் மொபைல் செயலியைப் (பேங்க்ன் mobile app) பயன்படுத்தி மக்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பித்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு OTP வரும். அதை அவர்கள் note செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், விண்ணப்பதாரர்கள் தங்களது தனிநபர் கடன் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். (பர்சனல் லோன் தேர்ந்து எடுக்க வேண்டும்).
- விண்ணப்பதாரர்கள் தங்கள் கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும். (Loan Amount மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்).
- அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களின் பான் கார்டு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த அனைத்து தகவல்களும் வங்கியால் சரிபார்க்கப்படும்.
- பின்னர், விண்ணப்பதாரர்கள் கடன் ஆனது வங்கியால் அங்கீகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் உடனடியாக விநியோகிக்கப்படுகிறது. (Loan amount ஆனது Bank Account-டில் வரும்).
கடன் விண்ணப்பதாரர்கள் பர்சனல் லோன் பெற தற்போது Address மற்றும் Identity Proof வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது கடன் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் கார்டு மூலம் பர்சனல் லோனை எளிதாக விரைவில் கடனை பெறலாம்.