Aalavandhan Trailer : ஆளவந்தான் ரீ-ரிலீஸ் | மிரட்டலாக வெளியான ட்ரெய்லர்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது, அதன் புதிய ட்ரெய்லர் (Aalavandhan Trailer) தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் நிர்வாணமாக நடித்தது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நந்து கதாபாத்திரத்தில் உடல் முழுவதும் பாம்பு பச்சை குத்திக் கொண்டு அவர் நடித்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர்.

ஆளவந்தான் :

2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்த ஆளவந்தான் திரைப்படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ – ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். ஆளவந்தான் திரைப்படம் வெளியான சமயத்தில் கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் ஹிட் அடித்த நிலையில், படத்தின் கதை, காட்சிகள் புரியாமல் பல சர்ச்சைகள் வெடித்து நிலையில், அந்த படத்தை மக்கள் பார்க்கவே இல்லை. பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதிக பட்ஜெட்டில் உருவான ஆளவந்தான் தோல்வியடைந்தது. இந்தப் படம் கில் பில் என்ற ஹாலிவுட் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஆளவந்தான் படத்தை  டிஜிட்டல் பதிப்பில் மீண்டும் வெளியிடப்படும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார். அதன்படி, ஆளவந்தான் படத்தின் மறு வெளியீட்டுக்கான டிஜிட்டல் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலின் அனிமேஷன் வெர்ஷனில் கடந்த வாரம் படக்குழு வெளியிட்டது.

Aalavandhan Trailer :

அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் (Aalavandhan Trailer) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரெய்லரின் (Aalavandhan Trailer) தொடக்கத்தில், ஒரு உடல் இரண்டு தலைகள் என்று ஒரு பாம்பு பச்சை குத்திய படம். சைக்கோ வில்லனாக ஒரு கமலும், அவரை விரட்டியடிக்க ஹீரோவாக ஒரு கமலும் என  ஆளவந்தான் புதிய ட்ரெய்லரிலும் (Aalavandhan Trailer) புதியதாகத் தெரிகிறார். கமல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆளவந்தானைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply