Abolition Of Angel Taxes In Budget 2024 : Budget 2024-ல் Angel Tax நீக்கம் அறிவிப்பு

இந்தியா ஆனது இந்திய Startup துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் Startup Ecosystem மற்றும் Startup துறையில் Innovation என்ற இரண்டையும் மேம்படுத்தும் பயணத்தில் உள்ளது. இந்திய அரசு ஆனது இந்த வளர்ச்சியைப் பெரிய அளவில் கொண்டு செல்ல பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த Startup துறையின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய பிரச்சனையாக “Angel Tax” இருந்து வந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்துறைக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் “Angel Tax” நீக்கத்தை இந்த 2024 பட்ஜெட்டில் (Abolition Of Angel Taxes In Budget 2024) அறிவித்துள்ளார். Angel Tax நீக்கப்படுவது இந்திய Startup நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

Abolition Of Angel Taxes In Budget 2024 - பட்ஜெட் 2024-ல் Angel Tax நீக்கம் அறிவிப்பு :

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இந்திய முதலீட்டாளர் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றும் போது இந்த Angel Tax ஆனது விதிக்கப்படுகிறது. இந்த Angel Tax ஆனது பங்குகளை வைத்து திரட்டப்பட்ட தொகைக்கு விதிக்கப்படும் வருமான வரி ஆகும். அதாவது இந்த Angel Tax ஆனது Startup நிறுவனங்களின் பங்குகளின் “நியாயமான சந்தை மதிப்பு” மீது செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு விதிக்கப்படும் வருமான வரி ஆகும். இத்தகைய நிதி திரட்டலை வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 56(2)(viib) இன் கீழ் “Income From Other Sources” என்ற அடிப்படையில், அதற்கு 30% வரி விதிக்கப்படுகிறது. இந்த “Angel Tax” நீக்கத்தால் இந்த மதிப்பீடு குறித்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் மற்றும் வருமான வரி அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்குகிறது. இனி மதிப்பீடு குறித்து பிரச்சனை எதுவும் இருக்காது.

இந்தியாவில் உள்ள Startup நிறுவனங்கள் நிதி திரட்ட போராட வேண்டிய நிலையில் அவற்றின் அதித செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேல் வரிச்சுமை என்பது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது. தற்போது Startup நிறுவனங்கள் இந்த Angel Tax தொகையை முழுமையாக அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்போது இந்த Angel Tax தொகை ஆனது முதலீட்டிற்கு மிகவும் ஆதரவான சூழலை உருவாக்கும். இனி இந்திய Startup உள்நாட்டு முதலீட்டாளர்கள் மதிப்பீடு மற்றும் வரி பிரச்சனை இல்லாமல் தங்குதடையின்றி முதலீடு செய்ய முடியும். மேலும், இனி வெளிநாட்டு முதலீடுகளுக்கு சமமாக உள்நாட்டு முதலீட்டாளர்களும் களத்தில் போட்டியிட முடியும். மேலும் இந்த Angel Tax நீக்கப்பட்டதால் கூடுதல் (Abolition Of Angel Taxes In Budget 2024) முதலீட்டால் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். Angel Tax நீக்கப்படுவது Startup நிறுவனங்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

Latest Slideshows

Leave a Reply