Acer Nitro V : கேமிங் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது...
ஏசர் நிறுவனம் நைட்ரோ வி (Acer Nitro V) எனும் கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக கேமிங் லேப்டாப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற ஹார்டுவேர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஏசர், Desktop, Laptop, Tablet மற்றும் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், சேமிப்பக சாதனங்கள், உள்ளிட்ட ஏராளமான தயாரிப்புகளை உலக அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அதிவேக லேப்டாப் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. அதிலும் குறிப்பாக அதிகமான கேமிங் லேப்டாப் மாடல்கள் மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி தற்போது Acer நிறுவனம் மிட் ரேஞ்ச் விலையில் நைட்ரோ வி (Acer Nitro V) எனும் புதிய கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக Gaming Laptop அறிமுகம் செய்துள்ளது.
Acer Nitro V-ன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம் :
ஏசர் கம்ஃபிவியூ எல்இடி பேக்லிட் டிஃஎப்டி எல்சிடி (Acer Comfy View LED – Backlit TFT LCD) மாடல் கொண்ட 15.6 இன்ச் ஃபுல்எச்டி (FHD) ஐபிஎஸ் (IPS) Display மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இன்டெல் கோர் ஐ5-13420 H (Intel Core i5 – 13420H) 64 பிட் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த Acer Nitro V லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் மூலம் இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கேமிங் பிரியர்களுக்கான என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 4050 (NVIDIA GeForce RTX 4050) கிராபிக்ஸ் ப்ராசஸசருடன் கூடுதலாக வருகிறது.
Acer Nitro V Storage :
இதில் 6GB ஜிடிடிஆர் 6 வீடியோ ரேம் (Video RAM) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 8GB ரேம் + 512GB மெமரி மற்றும் 16GB ரேம் + 512GB மெமரி என 2 வகையான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை 720p ரெசொலூஷன் கொண்ட டி-டைப் HD Camera (T-Type HD) டெம்போரல் நாய்ஸ் ரெடக்சன் (Temporal Noise Reduction) சப்போர்ட் உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் அம்சமாக ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) இன்டெல் வயர்லெஸ் வை-பை 6 ஏஎக்ஸ்201 (Intel Wireless Wi-Fi 6 AX201) சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
Acer Nitro V Battery & Rate :
மேலும் கே-லாக் (K-Lock) போர்ட் மற்றும் துல்லியமான டச்பேட் (Precision Touchpad) நைட்ரோ சென்ஸ் கீ (Nitro Sense Key) கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தமட்டில் 57 Wh சப்போர்ட் கொண்ட லித்தியம் பேட்டரி மற்றும் 3 பின் 135W AC அடாப்டர் கொண்ட சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏசர் நைட்ரோ வி கேமிங் லேப்டாப்பின் 8GB RAM 512GB மெமரி மாடலின் விலை ரூ.72,999 ஆகவும் 16GB RAM + 512GB மெமரி மாடலின் விலை ரூ.79,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஷேல் பிளாக் (Shale Black) என்ற ஒரு கலரில் விற்பனைக்கு வருகிறது.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்