Actor Allu Arjun Release : நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுதலை

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun Release) இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.

நடிகர் அல்லு அர்ஜுன் கைது

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன். அவரது புஷ்பா திரைப்படம் 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2-ம் பாகம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 4-ம் தேதி நள்ளிரவு சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்டன. ஹைதராபாத்தில் உள்ள தனியார் திரையரங்கில் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்த 36 வயது பெண் ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை (Actor Allu Arjun Release) ஏற்படுத்தியுள்ளது. அந்த திரையரங்கில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்திருந்தார். அல்லு அர்ஜுனை காண்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு (Actor Allu Arjun Release) செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியார் பாதுகாவலர்களுடன் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததே ரசிகர்கள் கூட்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் இறந்ததற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர், திரையரங்க மேலாளர் மற்றும் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் விடுதலை (Actor Allu Arjun Release)

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்ததோடு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நேற்று இரவு அவர் அடைக்கப்பட்டுள்ள சஞ்சல்குடா சிறை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவருக்கு தெலுங்கானா நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. ஆனால், ஜாமீன் ஆவணங்கள் அதிகாரிகளுக்கு வர தாமதமானதால், அல்லு அர்ஜுன் நேற்று சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் இன்று காலை ஜாமீனில் (Actor Allu Arjun Release) விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜுன் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2-ம் பாகம் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply