Actor Parthiban Latest Tweet : தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

Actor Parthiban Latest Tweet :

‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை தன்னுடைய பெயராக இருப்பதை பார்த்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வகையில் ‘லியோ’ படத்திற்காக எடிட் செய்யப்பட விஜய்யின் புகைப்படம் குறித்து பார்த்திபன் போட்ட பதிவு (Actor Parthiban Latest Tweet) இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ‘லியோ’ படம் தொடர்பாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட பதிவு (Actor Parthiban Latest Tweet) இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்பவர் பார்த்திபன். அவர் ஒரு புதுமை விரும்பியான இவர் சமூக ஊடகங்களில் செயலில் உள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவது இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. முன்னதாக, ‘லியோ’ படம் வெளியான போது, ​​இயக்குனர் ரத்னகுமார் தனது எக்ஸ் தளத்தில் லியோ விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை பார்த்திபன் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

Actor Parthiban Latest Tweet : இணையவாசி ஒருவர் அந்த பதிவை ஷேர் செய்து பார்த்திபனை டேக் செய்து உங்கள் பெயர் பிரபலமாகிவிட்டது என்று பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த பார்த்திபன், லோகேஷ் கனகராஜ்-விஜய் படத்தில் பெயர் அளவிலாவது இடம் பெற்றது மகிழ்ச்சி என பதிலித்தார். இவரின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இணையவாசி பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்டர் ஒன்றில் பார்த்திபன் முகம் இருப்பது போல் எடிட் செய்து இணையவாசிகள் சேட்டை செய்துள்ளனர்.

இதை பார்த்த பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, விஜய் ரசிகர்களே மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு (Actor Parthiban Latest Tweet) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘இரவின் நிழல்’ படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். முழுக்க முழுக்க குழந்தைகளை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். பார்த்திபன் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானை ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது X தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி, இரண்டாவது முறையாக இணைந்துள்ளது, மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. தனக்கே உரிய பாணியில் இருந்து முற்றிலும் விலகி ‘லியோ’ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் விஜய். இதனால் இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply