Actor Pugal At Vijayakanth Memorial : விஜயகாந்த் வழியை பின்பற்ற போவதாக புகழ் அறிவிப்பு

Actor Pugal At Vijayakanth Memorial :

விஜயகாந்த் போல் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போடபோறேன். பசின்னு இருக்குற யார இருந்தாலும் அங்கு வந்து சாப்பிடலாம் என்று குக் வித் கோமாளி புகழ் (Actor Pugal At Vijayakanth Memorial) கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், டிசம்பர் 28ல் காலமானார். அவரது உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க அலுவலகத்தில், அரசு மரியாதையுடன், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி (Actor Pugal At Vijayakanth Memorial) செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் விஜயகாந்த் ஐயாவின் மறைவுக்கு இருந்தேன். கேப்டன் சார் எவ்வளவு உதவியிருக்கிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சென்னைக்கு வந்த புதுசுல எனக்கு பக்கோடா, வாட்டர் பாக்கெட் தான் எனக்கு சாப்பாடு. நானும் கஷ்டப்படுகிறேன். ஐயா பசியோட வந்த எல்லாருக்கும் வயிறார உணவளித்துள்ளார். அதனால் இன்றிலிருந்தே (நேற்று) மதியம் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடப்போறேன்.  கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு உணவளிக்கப் போகிறேன். பசின்னு இருக்குற யார் வந்தாலும் அங்கு வந்து சாப்பிடலாம். கேப்டன் ஐயாவுக்கு இதைத்தான் செய்யப் போகிறேன். பசியோடு இருப்பவர்கள் என் அலுவலகத்திற்கு வரலாம்.

அதற்காக அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். நான் இருக்கும் வரை எனது அலுவலகத்தில் பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்கப்படும். எனக்குப் பின் வருபவர்களும் அதையே பின்பற்றுவார்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பசியுடன் இருப்பதாக நீங்களும் உணர்ந்தால் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள் என்றார். முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய புகழ், அவரது சமாதியை சுற்றி வந்து மரியாதை (Actor Pugal At Vijayakanth Memorial) செலுத்தினார். குக்விட் கோமாளி புகழைப் போலவே நடிகர் சென்ராயனும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தை போல் மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்வேன் என்றார். விஜயகாந்த் மறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் ஏராளமான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply