Actor Rajinikanth To Watch Jailer With UP Chief Minister : முதல்வருடன் இணைந்து ஜெயிலர் பார்க்கும் ரஜினி...

Actor Rajinikanth To Watch Jailer With UP Chief Minister :

நடிகர் ரஜினிகாந்த், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதியநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று இன்றும் பேசப்பட்டு வருகிறது. 24 வருடங்களுக்கு பிறகு ரஜினியும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்து நடித்துள்ள படம் “ஜெயிலர்” ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு போன்ற தென்னிந்திய முன்னணி நடிகர்களை வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலரில் ரஜினிக்கு பிறகு சிவராஜ்குமாருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகம் முழுவதும் 7,000 திரையரங்குகளிலும், தமிழகத்தில் 1,200 திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது. இதையடுத்து, ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் ஜெயிலர் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழ் திரையுலகில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஆன்மிக சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். வட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரஜினி மிகவும் நேசிக்கும் பாபாஜியின் குகைக்கு சென்று வழிபட்டார்.

Actor Rajinikanth To Watch Jailer With UP Chief Minister :  இந்நிலையில் அவர் நேற்று உத்தரபிரதேச மாநிலத்திற்குள் சென்றிந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், முதல்வர் யோகி ஆதியநாத்துடனான சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யோகி ஆதியநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ (Actor Rajinikanth To Watch Jailer With UP Chief Minister) படத்தைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து கேட்டபோது எல்லாம் இறைவன் அருள் என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply