Actor Siddharth Press Meet: 'சித்தா' பட விழாவில் சித்தார்த்தின் பேச்சு

Actor Siddharth Press Meet: இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை சித்தார்த் தொடங்கினார். சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகள் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சித்தார்த்தின் ‘டக்கர்’ படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டக்கருக்குப் பிறகு சித்தார்த் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் தற்போது சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் நாயகனாக நடிக்கின்றனர்.

சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்ட ‘சித்தா’ திரைப்படத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சிந்துபதி மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் SU.அருண் குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடித்த ‘சித்தா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ‘சித்தா’ பட நிகழ்வில் சித்தார்த் பேசியது வைரலாகி வருகிறது.

சித்தார்த்தின் பேச்சு (Actor Siddharth Press Meet)

“நாட்டை மாற்றவோ, சமூகத்தை சீர்திருத்தவோ நான் திரைப்படம் எடுக்கவில்லை. ஆயிரம் வழிகளில் நல்லது நடக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்” என்று நடிகர் சித்தார்த் கூறினார். இதுகுறித்து ‘சித்தா’ படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சித்தார்த் ‘இது அருண்குமாரின் ‘சித்தா’, வெற்றி தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல், படத்தின் கதைக்களத்திற்கு எடுத்தோம்.

படம் நாட்டை மாற்றவோ, சமுதாயத்தை சீர்திருத்தவோ படம் எடுக்கப்படுவதில்லை. ஆயிரம் வழிகளில் நல்லது நடக்க வேண்டும் என்பதை காட்ட நினைத்தோம். குழந்தைகளை வளர்ப்பதில் அன்பு, குடும்பம், பொறுப்பு என சொல்லும் படமாக ‘சித்தா’ உள்ளது. குற்றம் மற்றும் தண்டனையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்ற வேண்டாம் என்று சொல்லும் படமாகும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தாலும் அது மகிழ்ச்சிதான். உரையாடலில் புரிதல் வரும். நமக்குள் மாற்றம் வர வேண்டும் என்றால், குழந்தைகளிடம் பேச வேண்டும். சினிமா பற்றி எனக்குக் கற்றுக் கொடுத்த குருக்கள் மணிரத்னமும், கமல்ஹாசனும் இந்தப் படத்துக்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரியது.

ரஜினியும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். விரைவில் ‘சித்தா’ திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows