Actor Vadivelu Visits Kalaignar Memorial : கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்து பேசிய வடிவேலு

சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 26-ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என்று நடிகர் வடிவேலு (Actor Vadivelu Visits Kalaignar Memorial) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 26ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நடிகர் ரஜினிகாந்த், தோழமை கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 39 கோடி செலவில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாற்று காட்சியகம், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கக்கூடிய புத்தகக் கடை என பல வசதிகள் உள்ளன.

Actor Vadivelu Visits Kalaignar Memorial :

இந்நிலையில், இந்த நினைவிடத்தை நடிகர் வடிவேலு நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் நினைவிடம் குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை (Actor Vadivelu Visits Kalaignar Memorial) தெரிவித்தார். அதாவது, “கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்க்கும் போது பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது. அது கலைஞர் அய்யாவின் சமாதி அல்ல, சன்னதி. அதற்குள் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. ஆயிரம் கண்கள் வேண்டும். இவ்வளவு அழகான நினைவிடத்தை கட்டியிருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி எப்படி வாழ்ந்தார், அவரது வரலாறு, போராட்டங்கள், கஷ்டங்கள் என பல விஷயங்கள் உள்ளே சென்றால் தெரிந்துகொள்ளலாம். மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். அனைவரும் கட்டாயம் பார்வையிட வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என சொல்லிருக்கிறார்கள். அதன் விவரங்களைச் சரியாகச் செய்து கொண்டு அனைவரும் வரவேண்டும். மணிமண்டபத்தில் கலைஞருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் நீ வந்ததற்கு மிக்க நன்றி” என்று கூறினார்.

Actor Vadivelu Visits Kalaignar Memorial : அவர் என்னை வணங்கினார், நான் அவருக்கு வணக்கம் செலுத்தி புகைப்படம் எடுத்தேன். அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதைவிட முக்கியமானது திமுக தொண்டர்களுக்கு இது குலதெய்வ கோவில். திமுக என்கிற கோட்டையில் ஒரு செங்கல்லை கூட யாராலும் உருவாக்க முடியவில்லை என்பது கலைஞர் நினைவிடத்திற்கு சென்றால் புரியும். அந்த கட்சியை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்களும் போராட்டங்களும் பார்க்கும் போது புல்லரிக்கிறது. மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என்று சொல்லலாம். மணிமண்டபம் உண்மையிலேயே தொண்டுக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் கிடைத்த பரிசு. இதை உருவாக்க காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Latest Slideshows

Leave a Reply