Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு

Actor Vijay Calls VMI Volunteers : மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணியில் அனைத்து மக்கள் இயக்க நிர்வாகிகளும் கைகோர்த்து உதவ வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் (Actor Vijay Calls VMI Volunteers) விடுத்துள்ளார்.

மிக்ஜாம் புயல் :

கடந்த இரு தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சென்னை முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் அன்றாட வேலைகளைச் செய்வதற்கும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் நடவடிக்கையால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும், சில பகுதிகளில் மக்கள் இன்னும் கழுத்தளவு தண்ணீரில் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் தெருக்களில் நிரம்பிய தண்ணீர் வடியாததால் இன்னும் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது சீரமைப்பு பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. தமிழக அரசின் பணிகளை ஒரு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு பக்கம் மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளிப்பதாக வசைபாடியும் வருகின்றனர். சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழு நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறி வருகின்றனர். பல இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சூழலில் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திரையுலக பிரபலங்கள் பலர் இறங்கி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் (Actor Vijay Calls VMI Volunteers) அழைப்பு விடுத்துள்ளார்.

Actor Vijay Calls VMI Volunteers - விஜய் போட்ட அதிரடி உத்தரவு:

இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர், உணவு மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இன்றி, ஆயிரக்கணக்கானோர் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கோரி சமூக வலைதளங்களில் இன்னும் பல குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரசு மேற்கொள்ளும் மீட்புப் பணிகளில் அனைத்து மக்கள் இயக்க நிர்வாகிகளும் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் (Actor Vijay Calls VMI Volunteers) கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply