Actor Vijay Donates 1 Crore : நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடி வழங்கிய விஜய்

  • நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க ரூ.40 கோடி தேவைப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூபாய் ஒரு கோடி (Actor Vijay Donates 1 Crore) நிதி வழங்கியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் :

  • தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க ரூ.40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் தங்களது பங்கிற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டுமான பணிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
  • இதற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.

Actor Vijay Donates 1 Crore :

  • இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிக்கு, நேற்று அதாவது மார்ச் 11 ஆம் தேதி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் ரூபாய் ஒரு கோடி (Actor Vijay Donates 1 Crore) நிதியுதவி வழங்கியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply