Actor Vijay Thanked Superstar Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக (Actor Vijay Thanked Superstar Rajinikanth) தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன் கட்சியின் பெயரை விஜய் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரவி வந்தன. மேலும் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலே விஜய்யின் முதல் இலக்காக இருக்கும் என்று கூறப்பட்டது. அதையெல்லாம் நிரூபிக்கும் வகையில் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து, 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியது கடந்த சில நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் கொள்கை என்னவாக இருக்கும்? தனித்து போட்டியிடுவாரா? கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

என்னதான் அவர் கட்சி தொடங்கியதில் ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 69 படத்திற்கு பிறகு, நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்தார். இதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியலில் ஈடுபட்டாலும் விஜய்யின் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Vijay Thanked Superstar Rajinikanth :

அந்த வரிசையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த அவரிடம், அப்போது அவரது உடல்நிலை குறித்து கேள்வி கேட்டபோது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யின் கட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து ரஜினி தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி (Actor Vijay Thanked Superstar Rajinikanth) தெரிவித்துள்ளார். மேலும் தனது அரசியல் பயணத்திற்கான நோக்கம் என்ன என்பது பற்றியும் விரிவாக சூப்பர் ஸ்டார் ரஜினியிடன் விஜய் எடுத்துரைத்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். என்ன தான் விஜய், ரஜினி ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply