Actor Vishal Political Party : விரைவில் அரசியல் கட்சி துவங்கும் நடிகர் விஷால்

Actor Vishal Political Party :

நடிகர் விஷால் கட்சி தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் (Actor Vishal Political Party) வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் மக்களில் ஒருவராக மக்களுக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் கட்சி தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் (Actor Vishal Political Party) எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இத்தனை ஆண்டுகளாக சமூக சேவகராகவும், சமூகத்தில் தலைசிறந்தவராகவும் உங்களில் ஒருவராக அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பம் முதலே எனது ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி கழகமாக கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி “நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்” என்ற நோக்கத்தில் தொண்டு இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக செயல்பட்டு, அம்மாவின் பெயரில் நடத்தப்படும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் எண்ணற்ற ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறோம் மற்றும் ஏழை மாணவர்கள் மறைந்த ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களில் பெயரில் ஆண்டுதோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவர்கள் படிக்க உதவி செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி படப்பிடிப்புக்கு செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை எனது மக்கள் நல இயக்கம் மூலம் நிறைவேற்றி வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணியை செய்யவில்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவன் வாக்கின்படி என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன். மனதளவில், அதை என் கடமையாகக் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வரும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன். இனிவரும் காலங்களில் இயற்கை வேறு எந்த முடிவையும் எடுத்தால், மக்களில் ஒருவராக மக்களுக்காக பேசவும் தயங்கமாட்டேன்” என்றார். 2018 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், சமீபகாலமாக பிரதமர் மோடியை புகழ்ந்து ட்வீட் போட்டு வருகிறார். இதனால் விஷால் பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் விஷால் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக (Actor Vishal Political Party) தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply