-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
Acute Bird Flu Spreading : கொரோனோவை விட 100 மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல்
தற்போது உலகெங்கும் பரவி வரும் பறவைக் காய்ச்சல் ஆனது கொரோனோவை விட மோசமானது (Acute Bird Flu Spreading) என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அன்டார்டிகாவில் மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் AH5N1 என்ற பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரிய வந்தது. டெக்சாஸின் பார்மர் கவுண்டியில் சுமார் 1.6 மில்லியன் முட்டையிடும் கோழிகள் மற்றும் 337 ஆயிரம் குஞ்சுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அந்த பண்ணையில் இருந்த அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
AH5N1 வைரஸ் :
பறவைக் காய்ச்சல் என்று சொல்லப்படும் AH5N1 என்ற வைரஸ் ஏற்கனவே பல பாலூட்டிகளை பாதித்து வரும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் கொரோனா வைரஸ்ஸை விட 100 மடங்கு மோசமான வைரஸ் ஆகும். இந்த வைரஸ் மனிதர்களை தாக்கினால், இறப்பு எண்ணிக்கை ஆனது அதிகளவில் இருக்கும். இந்த AH5N1 வைரஸ் அமெரிக்காவில் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தாக்கியதாகவும் தற்பொழுது இந்த வைரஸ் (Acute Bird Flu Spreading) உலகமெங்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Acute Bird Flu Spreading - பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் :
இந்த வைரஸ் 1959 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஆனது பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கும், மற்றும் விலங்கிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது ஆகும். இந்த வைரஸ் ஆனது மனிதர்களை தாக்கினால் இருமல், சளி, உடல் வலியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி, தசைகளில் வலி, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி, மூக்கில் ரத்தம் வடிவது மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். சில மனிதர்களுக்கு இத்துடன் நிமோனியாவும் தாக்கக்கூடும்.
இது குறித்து மருத்துவ ஆராய்சியாளர்கள் கூறுகையில், “இந்த நோயை உண்டாக்கும் AH5N1 வைரஸ் மாடு, பூனை மற்றும் மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. பெரும்பாலும் காட்டில் வாழும் பறவைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இருக்கும் கோழிகளுக்கு இந்த AH5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவும். மேலும், மனிதர்களுக்கு இந்த AH5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் மிக எளிதாக பரவக்கூடியது. இது கொரோனாவை விட மிக மோசமானது மற்றும் 100 மடங்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. உலக அளவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும். கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்நோய்க்கான மருந்துகள் நம்மிடம் இருப்பதால் நோய் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முடியும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் (WHO), கொரோனா தொற்றின் ஆரம்ப காலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 20% மரணித்தார்கள். ஆனால், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 50%-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சலுக்கான மருந்து தயாரிப்பதில் பல முக்கிய மருந்து கம்பெனிகள் தற்பொழுது ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Latest Slideshows
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
-
Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
-
Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
-
Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
-
Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்