Adam's CAN Movie First Look : ஆடம்ஸ் இயக்கும் 'கேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ் ‘கேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Adam’s CAN Movie First Look) வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்தவர்கள் ஏராளம். அந்த வகையில் ஆடம்ஸ் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த ஆடம்ஸ், நடிப்பின் மீது தீராத காதலுடன் ஊடகங்களில் நுழைந்தார்.

ஆடம்ஸ் தனது தனித்துவமான பேச்சு மற்றும் ஸ்டைலான அணுகுமுறைக்காக அறியப்பட்டவர். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களுடன் தொடர்புகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு ஆடம்ஸுக்கு கிடைத்தது. தென்றல் சீரியலில் பிரபாகரன் என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. மிரட்டல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

கேன் :

தற்போது, ​​தொகுப்பாளரும் நடிகருமான ஆடம்ஸ் தனது அடுத்தகட்ட முயற்சியாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அந்த வகையில் காதல் கலந்த திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ‘கேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியன் படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், வி.டி.வி.கணேஷ், கலையரசன், ரோபோ சங்கர், கெளசல்யா, அக்ஷரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Adam's CAN Movie First Look :

‘கேன்’ படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Adam’s CAN Movie First Look) தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் படங்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் (Adam’s CAN Movie First Look) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எட்டு நாட்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுத் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply