Adani Turns Solar Power Into ATM : ராமநாதபுரத்தையே பணம் தரும் ஏடிஎம்மாக அதானி மாற்றியுள்ளார்

Adani Turns Solar Power Into ATM - தொழில் அதிபர் அதானி ராமநாதபுரம் மாவட்டத்தை பணம் தரும் ATM ஆக மாற்றியுள்ளார் :

விவசாயமும் இல்லாமல் தொழில்கள் செய்யும் வாய்ப்பும் இல்லாமல் வானம் பார்த்த பூமியாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை தொழில் அதிபர் அதானி பணம் தரும் ஏடிஎம் ஆக (Adani Turns Solar Power Into ATM) மாற்றியுள்ளார். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஓடும் பெரிய நதி என்றால் வைகை மட்டுமே ஆகும். வைகை ஆற்று நீரை மட்டுமே நம்பி மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே இல்லை தண்ணீருக்கு பெரிய தட்டுப்பாடு உண்டு. வானம் பார்த்த பூமியாக இருந்த விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தீப்பட்டி தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. திண்டுக்கல்லை பொறுத்தவரை பூட்டு தொழில் பிரத்யேகமாக உள்ளது. தேனி விளையும் பூமி என்பதால் அங்கு விவசாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை எப்பொழுதும் தண்ணீருக்கு பெரிய தட்டுப்பாடு உண்டு. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி இருக்கும் என்பதை கிண்டல் செய்வார்கள். தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் மக்கள் நிலங்களை குறைந்த விலைக்கு விற்று ஊரை காலி செய்து பஞ்சம் பிழைக்க நகரங்களுக்கு ஓடி வருகிறார்கள். தண்ணீர் இல்லாமல் வெறும் பொட்டல் காட்டில் விவசாயம் எப்படி செய்ய முடியும்.

அதானி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தை பணம் தரும் ATM - ஆக மாற்றியுள்ளது :

விவசாயமும் இல்லாமல் தொழில்கள் செய்யும் வாய்ப்பும் இல்லாமல் வானம் பார்த்த பூமியாக தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை கோடிகளை குவிக்கும் ATM-ஆக (Adani Turns Solar Power Into ATM) அதானி நிறுவனம் மாற்றியுள்ளது. தொழில் அதிபர் அதானி சூரியன் சுல்லென்று அடிக்கும் பூமியில் சூரிய ஒளியை பணம் தரும் ஏடிஎம்மாக மாற்றியுள்ளார். எந்த ஊரில் என்ன செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நன்றாக அறிந்தவர்களே வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். பணத்தை பெருக்க தெரிந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தெளிவாக சிந்தித்து பணத்தை பெருக்குகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி நிறுவனம் ஆனது 2500 ஏக்கர் பரப்பளவில் 648 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அதானியின் மின் நிலையத்தில் இருந்து தினம்தோறும் 30 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் இதுவரை 480 கோடி யூனிட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது.

ஆண்டு முழுவதும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 200 நாட்களுக்கு மேல் அதிக சூரிய ஒளி கிடைப்பதால் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி ஆனது அதிகமாக நடக்கிறது. இந்த அதானியின் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியும். அதானியின்  மின் நிலையம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது. ராமநாதபுரத்தில் அதானி நிறுவனம் இன்னும் சில சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் அமைக்க போகின்றன. இனிவருகின்ற காலங்களில் மின்சாரத்தில் தான் வாகனங்கள் ஓடப்போகும் நிலையில், ராமநாதபுரத்திற்கு சுக்கிர திசை ஆனது தொடங்கி உள்ளது. தூத்துக்குடி போல் ராமநாதபுரம் மாவட்டமும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்ததால் விரைவில் பொருளாதார மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் பூமியில் சூரிய ஒளியை விற்று கோடிகளை குவித்து வருகிறது அதானி நிறுவனம்.

Latest Slideshows

Leave a Reply