Additions In EB Hikes : தமிழகத்தில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் சேவை கட்டணங்கள் உயர்வு

Additions In EB Hikes :

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் (Additions In EB Hikes) உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.

மின்சார வாரியத்தின் மின்சார சேவை கட்டண உயர்வு - விவரங்கள் :

வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில்,

  • ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.1,020 ஆக இருந்த கட்டணம் ஆனது ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆக இருந்த கட்டணம் ஆனது ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 50 கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.2,045 ஆக இருந்த கட்டணம் ஆனது ரூ.2,145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • உயர் மின்அழுத்த இணைப்புகளுக்கான மீட்டர் வாடகை ஆனது ரூ.3,780-ல் இருந்து ரூ.3,965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கான கட்டணம் ஆனது ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மின்விநியோகம் ஆனது மின்கம்பங்கள் மூலமாகவும் மற்றும் தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும் செய்யப்படும் பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் ஆனது இருமடங்காக நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
  • மின்கம்பங்கள் மூலமாக மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மீட்டர் காப்பீடு கட்டணம் ஆனது ரூ.600-ல் இருந்து ரூ.750, இணைப்பு கட்டணம் ஆனது ரூ.500-ல் இருந்து ரூ.1,000, பதிவுக் கட்டணம் ஆனது ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ஆனது ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வைப்புத்தொகை ஆனது ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ஆனது ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ஆனது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம், இணைப்புக் கட்டணம் ஆனது ரூ.500-ல் இருந்து ரூ.1,000, மீட்டர் காப்பீடு கட்டணம் ஆனது ரூ.600-ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வைப்புத்தொகை ஆனது ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஒருமுனை மின் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் மீட்டர் வைப்புத் தொகையாக ரூ.5,200-ம் மற்றும்  மும்முனை மின்இணைப்புக்கு ரூ.7,100-ம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
  • வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ஆனது ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆகவும் மற்றும் பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000ஆகவும் மற்றும் மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஒரு இடத்திலிருந்து ஒருமுனை மின்இணைப்பு மீட்டரை மற்றொரு இடத்துக்கு மாற்ற ரூ.500-ல் இருந்து ரூ,1,000 ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.
  • ஒரு இடத்திலிருந்து மும்முனை இணைப்பு மீட்டரை மற்றொரு இடத்துக்கு மாற்ற ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.
  • வாடிக்கையாளர்கள் 5KW இணைக்கப்பட்ட சுமையுடன் புதிய உள்நாட்டு இணைப்பைப் பெற ரூ.1,000 அதிகமாக செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் இந்த தகவல்களை தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply