Adipurush Movie Ticket: ஆதிபுருஷ் படத்தை பார்க்க 10 ஆயிரம் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் பிரபலம்

பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு ஆதரவற்ற குழந்தைகள் படத்தை பார்க்கும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 10,000 டிக்கெட்களை முன் பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணக் கதையில் உள்ள ஒரு பகுதியை மையமாக வைத்து இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் பிரபாஸ் இராமனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியான போது மோசமான கிராபிக்ஸ் காரணமாக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ரூ.100 கோடிக்கு மேல் செலவழித்து படத்தின் கிராபிக்ஸ் பணிகளை படக்குழு புதுப்பித்துள்ளது. இதனால் ஜனவரியில் வெளியாகவிருந்த படம் தள்ளிப்போனது.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி, கன்னடம், மலையாம் ஆகிய 5 மொழிகளில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு, பிரபாஸ் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் நாயகி கிருத்தி சனோனும் திருப்பதியில் தரிசனம் செய்தனர். மேலும் படம் திரையிடப்படும் தியேட்டரில் ஒவ்வொரு காட்சியிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு இருக்கையை காலியாக விடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்க்கும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தெலங்கானாவில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் படத்தினை இலவசமாக பார்ப்பதற்கு 10,000 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகி உள்ளது. இதே ராமாயண கதையில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதிபுருஷ் திரைப்படத்தை பாராட்டிய ராகவா லாரன்ஸ்

Ragava Lawrence About Adipurush Movie

‘ஆதிபுருஷ்’ படத்தில் இராமனாக நடித்ததற்காக பிரபாஸுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இராமாயண கதையின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஓம் ராவத் இயக்கிய படம் ‘ஆதிபுருஷ்’. இதில் பிரபாஸ் இராமனாகவும், சைஃப் அலிகான் இராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ – ரிலீஸ் வெளியீட்டு விழா ஜூன் 6ஆம் தேதி திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் புதிய டிரைலரும் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு ஒரு வெற்று இடத்தை விடுமாறு தயாரிப்பாளரிடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார். ஆதிபுருஷின் டீஸர் வெளியாகி அதன் மந்தமான VFX காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தின் புதிய டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் ஜனவரியில் வெளியாகவிருந்த படம் தள்ளிப்போனது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதிபுருஷ் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லாரன்ஸ் தனது சமூக ஊடகக் கைப்பிடிகளில் ஒரு செய்தியை எழுதினார். ஒட்டுமொத்த ‘ஆதிபுருஷ்’ குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், மேலும் இந்திய அளவில் ஒரு நட்சத்திரமாக இருந்து இராமனாக நடித்ததற்காக பிரபாஸ்க்கு நன்றி. இன்றைய தலைமுறையினரைச் சென்றடைகிறது காவியமான இராமாயணம் எல்லாவற்றிலும் மிகப்பெரிய சாதனையாகும். படத்தின் மகத்தான வெற்றிக்கு எனது பிரார்த்தனைகள் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply