Adipurush New Poster: பிரபாஸ்சின் “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
30.03.2023 இன்று ராம நவமி நாளில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சன்னி சிங் ஆகியோர் தோன்றும் புதிய போஸ்டர்(Adipurush New Poster) வெளியீடு நடைபெற்றது. ராமரின் பிறந்தநாளைக் குறிக்கும் இந்த மங்களகரமான ராம நவமி நாளில் இந்த போஸ்டர் வெளியீடு நடைபெற்றுள்ளது. இந்த புதிய போஸ்டரில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் மற்றும் தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றுகிறார்கள்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி - பட குழுவினர் குறிப்பு
இத்திரைப்படம் ஆனது “தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி”யைக் கொண்டாடும் இந்து இதிகாசமான ராமாயணத்தின் திரைத் தழுவலாகும். இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஆதிபுருஷ் மிகவும் அதிக பொருட்செலவில் (i,e., Rs. 600 கோடி பட்ஜெட்டில்) தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். காட்சி விளைவுகளுக்காக மட்டும் Rs. 350 கோடி செலவிடப்பட்டுள்ளது.. ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 3D – யில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் லார்ட் ராமராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ராகவா என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சீதை வேடத்தில் க்ரிதி சனோன் நடிக்கிறார். சன்னி சிங், ராமரின் தம்பி லட்சுமணனாக நடிக்கிறார். ஹனுமானாக தேவதத்தா நாகே நடிக்கிறார். சைஃப் அலி கான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அஜய்-அதுல். இயக்குனர் ஓம் ராவுத் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை டி-சீரிஸ் பேனரில் பூஷன் குமார் தயாரித்துள்ளார். ( T-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபில்ஸ் தயாரித்துள்ளது).
ஆதிபுருஷ் ( முதல் மனிதன்) கரு உருவான விதம்
வரவிருக்கும் இந்திய புராண திரைப்படம் ஆதிபுருஷ் ஆனது சமஸ்கிருத இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தி ராஜா ராமர் ஆனவர் அனுமன் உதவியுடன் இலங்கையின் அசுர ராஜா ராவணனால் கடத்தப்பட்ட அவரது மனைவி சீதாவை மீட்கும் நோக்கத்துடன் இலங்கைத் தீவுக்குப் பயணிப்பது ஆகும்.
ஓம் ரவுத் முன்னதாக தன்ஹாஜி (2020) என்ற பீரியட் ஆக்ஷன் படத்தை இயக்கியவர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படமான ராமாயணத்தால் ஈர்க்கப்பட்டார். அந்த ஈர்ப்பு ஆனது ஓம் ரவுத்தரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதிபுருஷ் என்று ராமரின் புராண காவியத்தை எடுக்க தூண்டியது. COVID பூட்டுதலுக்கு மத்தியில் ஓம் ராவுத்தர் ஸ்கிரிப்டை எழுதினார். பிரபாஸ் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
அயோத்தி ராஜா ”ஆதிபுருஷ் “ வளர்ச்சி
ஆதிபுருஷ், 18 ஆகஸ்ட் 2020 அன்று விளம்பர போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 19 ஜனவரி அன்று ஆதிபுருஷ் படப்பிடிப்பு ஆனது தொடங்கியது. முறையான முதன்மை புகைப்படம் எடுத்தல் ஆனது தயாரிப்பாளர்கள் தெரிவித்தபடி பிப்ரவரி 2 , 2021 அன்று மும்பையில் ஆரம்பமானது. அந்த பிப்ரவரி 2 , 2021 நாளில் மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக மீண்டும் அதே மாதிரியான டூப்ளிகேட் செட்கள் அமைக்கப்பட்டன. இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது நவம்பர் 10, 2021 அன்று நிறைவடைந்தது.
"ஆதிபுருஷ்" வெளியீடு குறித்த அறிவிப்பு
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் ஆனது தமிழ், கன்னடம் & மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு 11 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் லால் சிங் சத்தா வின் வெளியீட்டின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் வீர சிம்ஹா ரெடியுடன் மோதலைத் தவிர்க்க படத்தின் வெளியீடு ஆனது ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 2, 2022 காந்தி ஜெயந்தி அன்று படத்தின் டீசர் ஆனது வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் அதன் மோசமான VFX க்கு மற்றும் CGI இன் மோசமான தரத்திற்காக கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. சைஃப் அலிகானின் ராவணன் கதாபாத்திரம் குறித்தும் சில சர்ச்சைகள் எழுந்தன.
டீஸர் ட்ரெய்லர் வெளியான பிறகு ஏற்பட்ட கடுமையான சர்ச்சைகள் காரணமாக, விஷுவல் எஃபெக்ட்களை மீண்டும் உருவாக்கி இந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
படத்தின் வெற்றிக்காக ஆசிர்வாதம் பெற ஓம் ரவுத் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு இந்த வார தொடக்கத்தில் சென்றார். அதிகாரப்பூர்வமான திரைப்பட விளம்பரங்களை தொடங்குவதற்கு முன் இயக்குனர் பூஷன் குமாருடன் சேர்ந்து ஓம் ரவுத் புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்று பூஜை செய்தார்.
ஆதிபுருஷின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து, பிரபாஸ் மற்றும் கிருத் சனோன், “மந்த்ரோன் சே பத்கே தேரா நாம் ஜெய் ஸ்ரீ ராம்” என்று எழுதி சமூக ஊடகங்களுக்கு இடுகையை வெளியிட்டனர்.
முன்னதாக, ஜனவரி 2023 இல் வெளியிட திட்டமிட்ட தயாரிப்பாளர்கள் இப்போது ஜூன் 16, 2023 அன்று திரையரங்குகளுக்கு வரும் என்று அறிவித்தனர். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். படம் 16 ஜூன் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.