Aditya Captures Impact Of Solar Storm : சூரியப் புயலின் தரவுகளை படம் பிடித்த ஆதித்யா எல்-1

சூரியனின் ‘ஏஆர்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் (Aditya Captures Impact Of Solar Storm) இந்த மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும், ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 11ம் தேதி, AR 3664 எனப்படும் சூரியனின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளியான ‘எக்ஸ்-கதிர்கள்’ பூமியைத் தாக்கியது. இது தொடர்பாக இஸ்ரோ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Aditya Captures Impact Of Solar Storm - இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு :

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த ஆண்டு 2003 ஆம் ஆண்டிலிருந்து சூரியனில் ஏற்பட்ட மிக வலிமையான சூரியப் புயலைத், தொடர்ந்து புவி காந்தக் கதிர்வீச்சை குறுகிய நேரத்தில் அதிக அளவு காந்தக் கதிர்களை வெளியிடும் சூரியனின் பகுதிகள் 1859 ஆம் ஆண்டின் அதிசக்தி வாய்ந்த சூரியப் புயலைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் பெற்றன. பல்வேறு எக்ஸ் ரக கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து அதிகளவு வெளியிடப்படும் (சிஎம்இ) கதிர்களும் கடந்த சில நாட்களாக பூமியைத் தாக்கியது. இதனால், துருவப் பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் திருப்பி விடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமியைத் தாக்கும் சூரியனின் இத்தகைய சக்தி வாய்ந்த கதிர்கள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 11 அன்று, புயலின் தீவிரம் அதிகமாக உணரப்பட்டபோது, பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ‘அயன மண்டலம்’ முழு வளர்ச்சியை எட்டாததால், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. இஸ்ரோவின் அனைத்து கண்காணிப்பு கருவிகள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்தி புயலை கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் ஆதித்யா எல்-1 மற்றும் சந்திராயான்-2 ஆகிய இரு விண்கலன்களும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு புயல் குறித்த தரவுகளை அளித்தன. மேலும், ஆதித்யா எல்-1 விண்கலம், அதிவேக சூரியக் காற்று, அதிக வெப்பமுடைய பிளாஸ்மா சூரியக் காற்று (Aditya Captures Impact Of Solar Storm) தற்போது வரை இப்பகுதியில் வீசி வருவதாக ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து தகவல் அனுப்பியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply